Tamilnadu
தாய்லாந்து TO சென்னை.. ஆப்பிரிக்க குரங்குகள் முதல் எலி வரை.. சோதனையில் பிடிபட்ட 31 அரியவகை விலங்குகள் !
தாய்லாந்து நாட்டு தலைநகரான பாங்காக்கில் இருந்து பல்வேறு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 'தாய் ஏர்வேஸ்' என்ற பயணிகள் விமானம் நேற்றைய முன்தினம் (சனிக்கிழமை) இரவு சென்னைக்கு வந்தது. அப்போது வழக்கமாக பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அந்த சமயத்தில் தஞ்சாவூரை சேர்ந்த குருசாமி சுதாகர் (44) என்ற பயணியை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தொடர்ந்து அவரது உடமைகளை பரிசோதித்ததில், அவர் வைத்திருந்த ஒரு பைக்குள் அரிய வகை விலங்குகள் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய குற்றப் புலனாய்வு வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், குருசாமி சுதாகர் கொண்டு வந்த அரியவகை விலங்குகளை ஆய்வு செய்தனர்.
அப்போது 3 ஆப்பிரிக்க அரிய வகை குரங்கு குட்டிகள், 2 வெளிநாட்டு மலை பாம்பு குட்டிகள், 26 அரிய வகை ஆப்பிரிக்க கண்டத்து எலிகள் என மொத்தம் 31 விலங்குகள் இருந்தது தெரியவந்தது. மேலும் அந்த விலங்குகளில் 15 ஆப்பிரிக்க கண்டத்து அரிய வகை எலிகளும், 3 ஆப்பிரிக்க அரிய வகை குரங்குகளும் ஏற்கனவே உயிரழந்து கிடந்துள்ளன.
இதைத்தொடர்ந்து அனைத்து விலங்குகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் உயிருடன் இருந்தவற்றை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர். மேலும் உயிரிழந்த அரிய வகை குரங்குகள், எலிகள் எல்லாம், செங்கல்பட்டு பகுதியில் உள்ள தனியார் பாய்லர் ஆலைக்கு எடுத்து சென்று மிகுந்த பாதுகாப்பான முறையில் எரிக்கப்பட்டது.
இதையடுத்து அரிய வகை வன உயிரினங்களை உரிய அனுமதியின்றி வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்த பயணி, குருசாமி சுதாகர் கைது செய்யப்பட்டு, சுங்கத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து உயிருடன் பறிமுதல் செய்யப்பட்ட பாம்பு உள்ளிட்ட விலங்குகளை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தாய்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதோடு இதற்கான செலவு தொகையை, இந்த அரிய வகை வனவிலங்கு கடத்தி வந்த பயணி குருசாமி சுதாகரிடம் வசூல் செய்யப்பட்டது.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!