Tamilnadu
“நடப்போம்; நலம் பெறுவோம்” திட்டம் துவக்கம்: கொட்டும் மழையில் நடைபயிற்சி மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி !
தமிழகம் முழுவதும் தொற்றா நோய்களான. சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் தொடர்பான நோய் பாதிப்புகளை குறைக்கும் ஒரு விழிப்புணர்வு திட்டமான சுகாதார நடைபாதை என்ற திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார் அதன் தொடக்க நிகழ்வாக சென்னை பெசன்ட் நகர் முத்துலட்சுமி பூங்காவில் இருந்து கடற்கரை சாலைவரை 8 கிலோமீட்டர் நடைபாதையை தொடங்கி வைத்து நடைப் பயிற்சி மேற்கொண்டார்.
நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் சிறப்பு கல்வெட்டினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து காணொலி காட்சி வாயிலாக 37 மாவட்டங்களில் நடப்போம் நலம் காப்போம் திடத்தினை துவக்கிவைத்தார் அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.
பின்னர் பெசன்ட் நகர் கடற்கரையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மக்களவை உறுப்பினர் கனிமொழி சோமு, சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை த.வேலு, பிரபாகர்ராஜா, காரம்பாக்கம் கணபதி ஆகியோர் பங்கேற்று நடைபயிற்சி மேற்கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தின் எதிர்காலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான். மக்கள் நல் வாழ்வுத்துறையில் இன்னுயிர் திட்டம் உள்ளிட்ட ஆறு சிறப்பு திட்டங்கள் ஏற்கனவே உள்ளது. அந்த வகையில் ஏழாவது சிறப்பு திட்டமாக இந்த நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் செயல்படவுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் இத்தனை ஆண்டுகள் மக்களுக்கு சேவை செய்ய அவர் செய்த உடற்பயிற்சி காரணம். 18 வயது முதல் 35 இளைஞர்களில் 2 கோடி இளைஞர்கள் விளையாட்டுத்துறையில் மேம்பட பலவற்றை செய்து வருகிறார். தொடங்கி வைத்திருக்கும் அந்த 8 கிலோ மீட்டர் சாலைகளில் தான் நடக்க வேண்டும் என்று இல்லை. நடக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான்.
மாரடைப்பு நோய் உலகில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ஒரே தீர்வு நடப்பதும், உடற்பயிற்சி செய்வதும் தான். நோய் வருவதற்கு முன் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம். எதையும் முறையாக தொடங்கி வைத்தால் பாதி முடிந்தது போல். தமிழகத்தில் இந்த திட்டம் சிறப்பான திட்டமாக அமையும்.” எனத் தெரிவித்துள்ளார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி மேடையில் பேசுகையில், “சென்னையில் இந்த நிகழ்ச்சியில் என்னோடு கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். இடி மின்னல் கடும் மழையில் நடந்து வந்துள்ளோம்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அண்ணன் மாரத்தான் சுப்பிரமணியன் இளைஞர்கள் எல்லாருக்கும் இன்ஸ்பிரேஷன் உள்ளார். இவருக்கு இன்ஸ்பிரேஷன் உள்ள முதலமைச்சருக்கும் நன்றி. சென்னை மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தினை மக்கள் இயக்கமாக செயல்படுத்த வேண்டும். மக்கள் அதனை பயன்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
கோவையில் ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !