Tamilnadu
“ED-யும் IT-யும் தான் பாஜகவின் கூட்டணி கட்சிகள்..” : அமைச்சர் ரகுபதி விமர்சனம் !
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் சுகாதார திட்டமான, “நடப்போம்; நலம் பெறுவோம் - 8 KM Health Walk” திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். தொடர்ந்து இந்த திட்டம் மாவட்டந்தோறும் துவக்கி வைக்கப்பட்டது. அந்த வகையில், புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டத்தை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களுக்கு தேவையான முக்கிய மசோதாக்களுக்கு ஆளுநர் கையொப்பமிட மறுப்பதாகவும், மக்கள் விரோத போக்கில் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து அவர் பேசியதாவது, "தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் அறிக்கையை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
ED-யும், IT-யும் தான் பாஜகவுடைய முழு கூட்டணி கட்சிகளாக உள்ளது. அந்த இரண்டையும் வைத்து தான் வரும் நாடாளுமன்ற தேர்தலை பாஜக சந்திக்கவுள்ளது. அந்த கூட்டணி கட்சி ஒத்துழைப்போடு அவர்கள் செயல்படுகிறார்கள். ஏதாவது ஒரு பாஜக ஆளும் மாநிலத்தில் அமைச்சர்கள் மீதோ, பாஜகவினர் மீதோ இது போன்ற ED, IT சோதனை நடைபெற்றுள்ளதா?
எதிர்க்கட்சிகளை, குறிப்பாக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளை பயமுறுத்துவதற்கும் அச்சுறுத்துவதற்கும் அவர்கள் கையில் எடுத்துள்ள இரண்டு ஆயுதம் தான் ED-யும், IT-யும். மக்களுக்கு தேவையான முக்கிய மசோதாக்களுக்கு ஆளுநர் கையொப்பமிட மறுக்கிறார். மக்கள் விரோத போக்கில் செயல்படுகிறார் என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டவதற்காக, எந்த மசோதாவாக இருந்தாலும் அதற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம்.
ஏற்கனவே தெலுங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில ஆளுநர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்து பின்பு ஆளுநரின் செயல்பாடுகளில் மாற்றம் இருப்பதாக தெரியவில்லை. மாற்றம் இருந்திருந்தால் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்திருப்பார்" என்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!