Tamilnadu
”பாஜக அரசின் திட்டங்களில் பாரத் என்ற பெயர் இருந்தாலே அதில் 10 மடங்கு ஊழல் இருக்கும்”: சு.வெங்கடேசன் சாடல்
“மோடி அரசின் 7.5 லட்சம் கோடி ரூபாய் மெகா ஊழல்: சிஏஜி அறிக்கையும் - வகுப்புவாத வெறுப்பு அரசியலும்” எனும் தலைப்பில் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.
இந்த கருத்தரங்கில் பேசிய சு.வெங்கடேசன் எம்.பி, "கடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதானிதுறை முகத்தில் பிடிக்கப்பட்ட ரூ. 24 ஆயிரம் கோடி போதைப் பொருள் என்ன ஆனது என்று கேள்வி கேட்டபோது எனது மைக் ஆப் செய்யப்பட்டது. அதானி என்ற பெயரை நாடாளுமன்றத்தில் யார் சொன்னாலும் அவர்கள் பைக் உடனே ஆப் செய்யப்படும்.
பிரதமர் மோடி நாடாளுமன்றம் வரும்போதெல்லாம் பா.ஜ.க எம்.பிக்கள் மோடி மோடி என்று முழங்குவார்கள். அப்போது எதிர்கட்சியான நாங்கள் அதானி.. அதானி என்று முழக்கமிட்ட உடனே அவர்கள் மோடி முழக்கத்தை ஆப் செய்துவிட்டார்கள். அதானி என்ற பெயரை கேட்டாலே மோடியும் பா.ஜ.கவும் அமைதியாகி விடுகிறது.
மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது அவரின் முதன்மை செயலாளராக இருந்தவர்தான் ஒன்றிய பா.ஜ.க அரசின் ஊழலை சி.ஏ. ஜி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இது எப்படி நடந்தது என்று தெரியாமல் விழிபிதுங்கிக் கிடக்கிறார் மோடி. உலகத்திற்கு புதிய பல விஷயங்களை இந்த சி.ஏ. ஜி சொல்லி உள்ளது.
இந்தியாவில் மட்டும் தான் சந்திரயான் ரூ.600 கோடியில் நிலவிற்கும் அனுப்ப முடியும். அதேநேரம் 2 கிலோ மீட்டர் சாலையும் ரூ. 600 கோடிக்குப் போட முடியும். பாரத் என்று எந்த திட்டத்தின் பெயர் இருந்தாலும் அதில் 10 மடங்கு ஊழல் இருக்கும். வந்தே பாரத் ரயிலின் வேகத்திற்காக 13 ரயில் அட்டவணையை மாற்றி அமைத்தது வரலாறு இதுவரை நடந்தது உண்டா?. மோடி ஆட்டிசியல் தான் ஆன்மாவுக்குக் கோடி கணக்கில் செலவு செய்துள்ளதாகக் கணக்குக் காட்ட முடியும்.
இப்படி பா.ஜ.க ஆட்சியின் ரூ. 7.5 லட்சம் கோடி மெகா ஊழலை வெளியிட்ட சி.ஏ.ஜி தணிக்கையாளர்களை மோடி அரசுப் பணியிடமாற்றம் செய்துள்ளது. ரூ.7.5 லட்சம் கோடி ஊழலை வெளிப்படுத்திய பின், தணிக்கை செய்ய கூடாது என்று எழுத்துப்பூர்வமாக உத்தரவிடும் எல்லைக்கு சென்றுள்ளது மோடி அரசு. தணிக்கை துறையின் முதுகெலும்பை உடைக்கிறார் மோடி" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!