Tamilnadu
“50 ஆயிரம் பெண்கள் அமர்ந்து பார்க்கலாம்” - மகளிர் உரிமை மாநாட்டின் ஏற்பாடுகள் என்னென்ன? - அமைச்சர் மா.சு
சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஓய்.எம்.சி.ஏ இன்று மாலை திமுக மகளிரணி சார்பில் ‘மகளிர் உரிமை மாநாடு’ நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃதி உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த பெண் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதற்காக பெண் தலைவர்கள் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். இதனை முன்னிட்டு நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து இந்த சூழலில் இந்த மாநாட்டிற்கான இறுதிக் கட்ட ஏற்பாடு பணிகளை சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
அப்போது அளித்த பேட்டி பின்வருமாறு :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழி காட்டுதல் படி முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி 'மகளிர் உரிமை மாநாடு' இன்று நடைபெற உள்ளது. இந்தியா கூட்டணி சார்ந்த மகளிர் தலைவர்கள் அகில இந்திய அளவில் இருந்து வர உள்ளனர்.
மழை பெய்தால் கூட 50,000 பெண்கள் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது. மழை இல்லாமல் இருந்தால் கூடுதலாக 15,000 இருக்கைகளும் அரங்குக்கு வெளியில் அமைக்கப்படும். மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடியவர்களின் கட்சியில் கொடிகளும் வைக்கப்பட்டுள்ளது. 50 அடியில் 50 கொடி கம்பங்கள் திராவிட முன்னேற்றக் கழக கொடியுடன் உள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி என்பதால் கலைஞர் தொடர்புடைய தேசிய தலைவர்கள் சார்ந்த புகைப்படங்கள் 400-க்கும் மேற்பட்டவை உள்ளது. 50-க்கும் மேற்பட்ட கழிப்பறை வசதிகளும், பாலூட்டும் தாய்மார்களுக்கான ஐந்து அறை, மேடையிலேயே பசுமை அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐம்பதாயிரம் இருக்கைகளிலும் ஒரு பழச்சாறும் தண்ணீர் பாட்டிலும் வைக்கப்பட உள்ளது. மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. 3 ஆயிரம் வாழை மரங்கள் கட்டபோட்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது. ஐந்து நுழைவாயில்களிலும் அலங்கார வளைவுகள் போடப்பட்டுள்ளது.
இராணுவத்திற்கு சொந்தமான இடம் அருகில் இருப்பதால் அங்கு அனுமதி பெறப்பட்டு வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய 10 இடங்களில் வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் நந்தனம் வழியாக லோட்டஸ் காலனி அருகில் உள்ள மைதானத்தில் நிறுத்திவிட்டு இருநூறு மீட்டர் நடந்து இந்த இடத்தை அடையலாம்.
சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர் உள்ளிட்டோருக்கு தனியாக நிறுத்தம் தனி நுழைவாயில் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள், தோழமைக் கட்சிகளின் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட பலர் வர உள்ளனர். முதலமைச்சர் உள்ளிட்ட மேடையில் அமரக்கூடிய தலைவர்களுக்கு மேடை அருகிலேயே வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக திரைத்துறை சார்ந்த சின்ன பொண்ணு, மாலதி உள்ளிட்ட பாடகிகளின் இசை நிகழ்ச்சி ஒரு மணி நேரம் நடைபெறவுள்ளது. முன் பகுதியில் இருக்கக்கூடிய 1500 சிறப்பு விருந்தினர்களுக்கு சிறுதானிய பலகாரங்கள் வழங்கப்பட உள்ளது.
Also Read
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!