Tamilnadu
விடாத மன அழுத்தம்.. பல பதக்கங்களை பெற்ற முன்னாள் பளுதூக்கும் வீராங்கனை எடுத்த விபரீத முடிவு !
கோவை வடவள்ளி கல்வீராம் பாளையத்தை சேர்ந்தவர் அசோக். இவருடைய மனைவி சாமுண்டீஸ்வரி (52). இவர் முன்னாள் பளுதூக்கும் வீராங்கனை ஆவார். அசோக் - சாமுண்டீஸ்வரி தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், சாமுண்டீஸ்வரிக்கு திடீரென உடல்நல பிரச்னை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக மன அழுத்த நோயில் அவதிப்பட்டு வந்த சாமுண்டீஸ்வரி, அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த சூழலில் மன அழுத்தம் தாங்கமுடியாமல், கடந்த மார்ச் மாதம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் விஷம் குடித்ததை அறிந்த குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு மருத்துமனையில் அனுமதித்து, உயிரை காப்பாற்றினர்.
பின்னர் சாமுண்டீஸ்வரியை அவரது குடும்பத்தினர், மிகவும் கவனமுடன் பார்த்துக் கொண்டனர். இந்த நிலையில், மீண்டும் மன அழுத்தத்தில் இருந்து வந்த அந்த சாமுண்டீஸ்வரி, மீண்டும் தற்கொலை செய்துகொள் எண்ணியுள்ளார். அதன்படி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சாமுண்டீஸ்வரி திடீரென்று பூச்சிக் கொல்லி மருந்தை குடித்துள்ளார்.
இதில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கிய நிலையில், கிடந்த அவரை கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட சாமுண்டீஸ்வரி முன்னாள் பளுதூக்கும் வீராங்கனை ஆவார். இவர் தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை பெற்றுள்ளார். குறிப்பாக கடந்த 1991-ம் ஆண்டு சர்வதேச மகளிர் பளுதூக்கும் போட்டியில் 3-வது இடமும், 1992, 1994-ம் ஆண்டுகளில் நடந்த ஆசிய பளுதூக்கும் போட்டியில் 44 கிலோ எடைப் பிரிவில் தங்க பதக்கங்களும் வென்று சாதனை படைத்தார். தொடர்ந்து 1995-ம் ஆண்டு ஆசிய பளுதூக்கும் போட்டியில் முதலிடமும் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!