Tamilnadu
“வெறுப்பு அரசியலில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள்தான் !” - திமுக எம்.பி கனிமொழி ஆவேசம் !
திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம், திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ், இணைச் செயலாளர்கள் மகளிரணி குமரி விஜயகுமார், மகளிர் தொண்டரணி தமிழரசி ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய கனிமொழி எம்.பி, வெறுப்பு அரசியலை உருவாக்குவதால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்று ஆவேசமாக பேசினார். இதுகுறித்து அவர் பேசியதாவது, "திமுக ஆட்சியில் பெண்கள் முன்னேற்றத்துக்காக பல திட்டங்கள் நடைமுறையப்படுத்தப்பட்டது. அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு, திருமண உதவி திட்டம், மகளிர் சுய உதவிக் குழு, சொத்தில் சம உரிமை, கல்வி உதவித் தொகை, இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை என பல உள்ளன.
ஆனால் ஒன்றிய பாஜக அரசு தற்போது கொண்டு வந்துள்ள மகளிர் இடஒதுக்கீடு என்பது வெறும் கண்துடைப்புக்காக மட்டுமே. இந்த மசோதாவால் மகளிர் மீது அக்கறை கொண்டுள்ளதாக பாஜக அரசு போலி வேஷம் போடுகிறது. மணிப்பூரில் அரசியல் லாபத்துக்காக கலவரத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறது பாஜக.
மணிப்பூரில் சாதி, மத ரீதியாக மக்களை பிரித்து, தொடர்ந்து மக்களிடையே காழ்ப்புணர்ச்சியை விதைத்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய மற்றும் அம்மாநில பாஜக அரசுகள். வெறுப்பு அரசியலை உருவாக்குவதால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். எந்த இடத்தில் வன்முறை, அதிகாரம், அரசியல் ஆணவம் தலை தூக்குகிறதோ, அது பெண்ணுக்கு எதிரான ஒன்றாகவே மாறும்." என்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!