Tamilnadu
“எந்த காலத்திலும் இஸ்லாமியர்களின் வாக்கு பாஜகவிற்கு கிடையாது..!” - காதர் மொய்தீன் பேச்சு !
சென்னை இராயபுரத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 2023 முதல் 2027 ஆம் ஆண்டு வரை இயக்கத்தின் தலைமை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காதர் மொய்தீன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிக்கும் என தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், "இந்த பொதுக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது குறித்து சில தீர்மானங்கள் முடிவு எடுத்து உள்ளோம். முதல் தீர்மானமாக திராவிட மாடல் ஆட்சியின் கொள்கைகளை இந்தியா முழுவதும் பரவ வேண்டும் எனும் அடிப்படையில் எங்களது பணியினை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கின்றோம்.
வரும் நவம்பர் 14 ஆம் தேதி டெல்லி கள்கோத்திரா ஸ்டேடியத்தில் இந்தியின் யூனியன் முஸ்லிம் லீக் பவள விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளனர்.
'இந்தியா' என்றும் பெயரில் கூட்டணி அமைத்து, பாஜக ஆட்சியை அகற்றி அனைவருக்கும் அனைத்தும் எனும் நல்லாட்சியை ஒன்றியத்தில் கொண்டு வர வேண்டும் என இந்தியா கூட்டணியில் அனைவரும் முயற்சி செய்து வருகின்றனர். இந்தியா கூட்டணி உருவான நாள் முதலே பிரதமர் நரேந்திர மோடி பெரும் குழப்பத்தில் இருக்கின்றார். அவரது ஆட்சி பறிபோகிறது என அவரே சொல்வது போல் உளறி கொண்டு இருக்கின்றார்கள்.
தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். இதுவரை வேலூர், தேனி, மயிலாடுதுறை, வட சென்னை, இராமநாதபுரம் என 5 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளோம். இஸ்லாமிய சமுதாய வாக்கு பாஜகவிற்கு இல்லாமல் போனதுக்கு காரணம், இஸ்லாமியர்களை இந்தியர்களாக பா.ஜ.க பார்ப்பதில்லை.
நாடாளுமன்ற தேர்தல்களில் இஸ்லாமியர்களுக்கு பா.ஜ.க எப்போதும் சீட் வழங்கியது இல்லை. இஸ்லாமியர்களின் வாக்கு எங்களுக்கு தேவையில்லை என வெளிப்படையாகவே பா.ஜ.க தலைவர்கள் கூறுகின்றனர். எந்த காலத்திலும் இஸ்லாமியர்களின் வாக்கு பாஜகவிற்கு கிடையாது." என்றார்.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!