Tamilnadu
“ஒரே நாளில் 1000 சிறப்பு முகாம்கள்..” : அதிரடி ஆக்சனில் இறங்கிய அரசு - அமைச்சர் சொன்ன முக்கிய அப்டேட் !
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், டெங்கு மற்றும் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. கிராமம், நகரங்கள் என தனித்தனியாக பட்டியல் தயார் செய்து அந்தந்த மாவட்டங்களில் நோய் தடுப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மருத்துவ முகாம்கள் தொடர்க காய்ச்சல் கண்காணிப்பு உள்ளிட்டவை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் டெங்கு மற்றும் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக 23 ஆயிரத்து 717 தினசரி தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உயிர் காக்கும் மருத்துகள் போதிய அளவில் உள்ளது. அந்த இருப்புகளை கண்காணிப்பும் பல உள்ளது. பள்ளிகள், உணவகங்கள், திரையரங்குகள் பூக்காக்கள் திருமண மண்டபங்கள் கல்லூரிகள் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அகற்றும் பணியும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் டெங்கு தனி வாடுகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டெங்கு மற்றும் மழைக்கால தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் நோய் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.
2017 ஆண்டு 23,906 டெங்கு பாதிப்பு அதிகமாக ஏற்பட்டது 65 டெங்கு காய்ச்சலில் இறந்து உள்ளனர். எடப்பாடி பழனிசாமி அரசியலில் தனது இருப்பை காட்டிக் கொள்வதற்காகவே டெங்கு காய்ச்சல் பிரச்சனையை அறிக்கையாக அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில்நாளை ஒரே நாளில் 1000 காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். டெங்கு காய்ச்சல் குறித்து விவரங்களை 104 இலவச தொலைபேசி எண் இருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!