Tamilnadu
"மின்சார வாகன உற்பத்தியில் சாதனை படைத்து வரும் தமிழ்நாடு" : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பெருமிதம்!
இந்தியாவில் தயாராகும் மின்னணு வாகனங்களில் 40% தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என ஒன்றிய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து செப்டம்பர் 20ம் தேதி வரை நாடுமுழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் 10 லட்சத்து 44 ஆயிரத்து 600 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 4 லட்சத்து 14 ஆயிரத்து 802 மின்சார வாகனங்கள் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், மின்சார வாகன உற்பத்தியில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளது என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பெருமையுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, "மின்சார வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை, சேலம் ஆகிய 6 நகரங்கள் மின்சார வாகன மையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை 10 லட்சம் மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள மின்சார வாகன தொழிற்சாலையில் இருந்து அதிக அளவில் மின் வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்க கடந்த 2 ஆண்டுகள் மேற்கொண்ட முயற்சியே இதற்கு காரணம்.
திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் பொருளாதார ரீதியாக அடையும் வளர்ச்சிகளை கண்டு மேலை நாடுகளில் இருந்து வரும் முதலீட்டாளர்கள் "எங்கள் நாடுகளில் கூட இந்த வளர்ச்சி இல்லை" என்று பிரம்மிக்கிறார்கள். ஆட்டோமொபைல், மின்னணு, மின் வாகன உற்பத்தியை தொடர்ந்து தொழில்நுட்பத்திலும் குறிப்பிட்ட வளர்ச்சியை வரும் காலங்களில் தமிழ்நாடு அடையும்.
அறிவு வளர்ச்சியில் சிறந்த விளங்கும் தமிழ்நாடு விரைவில் வளர்ந்த நாடுகளைப் போல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறையிலும் கவனம் செலுத்த இருக்கிறது. தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகளில் மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. ஓலா, Bosch உள்ளிட்ட தொழிற்சாலைகளில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!