Tamilnadu

”மின் கட்டண உயர்வுக்கு அதிமுகவும், பாஜகவுமே காரணம்” : தெள்ளத் தெளிவாக விளக்கிய அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

சிறு குறு தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன் மற்றும் டி.ஆர்.பி ராஜா ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அமைச்சர் தா.மோ. அன்பரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், "சிறு குறு தொழிற் நிறுவனங்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதையடுத்து உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேச உத்தரவிட்டார்.

அதன்படி இன்று நானும், அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவும் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த பேச்சுவார்த்தையில்12 சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தரும்.

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில்தான் மின் கட்டணம் குறைவாக உள்ளது. கலைஞர், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது உதய் மின் திட்டத்தில் இவர்கள் கையெழுத்துப் போடவில்லை. ஆனால் ஜெயலலிதா மறைவிற்குப் பின் அதிமுக ஆட்சியில் அப்போதைய அமைச்சர் தங்கமணி, உதய் மின் திட்டத்திற்கு ஆதரவாகக் கையெழுத்துப் போட்டதால் இன்று மின் கட்டணம் உயர்ந்துள்ளது. ஒன்றிய அரசும், அதிமுக அரசுமே மின் கட்டணம் உயர்வுக்கு காரணம். ஆனால் அன்று அவர்கள் செய்த தவறுக்கு இன்று நாங்கள்பதில் சொல்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”ஆவின் பால் விலை உயர்வு என்பது கற்பனை” : அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!