Tamilnadu
“உறுப்பு தானம் வழங்குவோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள்.. இன்று முதல் அமல்”: அமைச்சர் மா.சு !
பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். அரசு மரியாதை செய்யும் பணி இன்று முதல் அமலுக்கு வருகிறது என மருத்துவம் மற்றம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
உறுப்பு தான தினத்தையோட்டி தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் நடத்திய விழிப்புணர்வு விழா மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேசுகையில், “உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. 2008 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்த போது உடல் உறுப்பு தானம் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.
இதை தொடர்ந்து கடந்த 2008 தேதி திதேந்திரனின் உடல் உறுப்பு தானத்தை போற்றும் வகையில் செப்டம்பர் 23 உறுப்பு தான தினமாக தமிழகத்தில் அனுசரிக்கப்படுகிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் அனைத்து மருத்துவ கல்லூரி முதல்வர்களுடன் ஒரு கூட்டம் நடத்தினோம் .கூட்டத்தில் உறுப்பு தானத்தை ஊக்குவிக்க வேண்டும் உறுப்பு தானம் செய்தவர்களை மதிக்க வேண்டும் என தெரிவித்தோம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்றைக்கும் கூட பெரிய அளவில் உறுப்புகள் பெறுபவரின் காத்துக் கொண்டிருப்பவருடைய பட்டியல் நீளத்தான் செய்கிறது. இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு இதுவரை 313 பேர் உறுப்பு தானம் செய்துள்ளனர். 613 பேர்உறுப்புகள் பெற்று பயன் அடைந்துள்ளனர். நிச்சயம் அடுத்த ஆண்டு காத்திருப்போர் பட்டியல் ஜீரோ நிலைக்கு வந்தால் இந்த நிகழ்வின் நோக்கம் வெற்றி பெற்றதாக இருக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
உறுப்பு தான தினமான இன்று தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். உறுப்பு தானம் செய்வர்களின் உடலுக்கு அரசு மரியாதை செய்யும் பணி இன்று முதல் அமலுக்கு வருகிறது எனதெரிவித்துள்ளார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே செல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!