Tamilnadu
“இது உங்களுக்கான உரிமைத்தொகை, ஸ்டாலின் வழங்கும் உழைப்புத் தொகை”: 1.06 கோடி மகளிருக்கு முதலமைச்சர் கடிதம்!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கிய நிலையில் இத்திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட 1 கோடியே 6 லட்சத்து ஐம்பதாயிரம் மகளிர்களுக்கும் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தனித்தனியாக ஸ்பீட் போஸ்டில் முதலமைச்சரின் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், “தங்களது அன்புக் கட்டளையால் தமிழ்நாட்டின் வாய்ப்பைப் பெற்ற உங்களின் உங்களுக்கு எழுதும் கடிதம்;
பேருந்தில் மகளிருக்குக் கட்டணமில்லா விடியல் பயணம், அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலக் கல்லூரிக்கு வரும் புதுமைப் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, நகைக்கடன் ரத்து, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள்.
மகளிர் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை இத்திட்டங்கள் உருவாக்கி உள்ளன. இந்த வரிசையில் மற்றுமொரு மாபெரும் திட்டம்தான் தேர்தலுக்கு முன்னதாக நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் மிகமிக முக்கியமான 'மகளிர் உரிமைத் திட்டம்'.
இந்தத் திட்டத்தின் பயனாளியாகத் தகுதியின் அடிப்படையில் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளீர்கள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சராகத் தொண்டாற்றும் அன்பு உடன்பிறப்பு, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இனி மாதம்தோறும், ஆயிரம் ரூபாய் தங்களின் வங்கிக் கணக்கில் தமிழ்நாடு அரசால் நேரடியாக வரவு வைக்கப்படும்.
பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும், அவரது தாய், சகோதரி, மனைவி, மகள் எனப் பெண்களின் பல மணிநேர உழைப்பு இருக்கிறது. இப்படி கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்புக்குத் தரப்படும் அங்கீகாரமே இத்தொகையாகும்.
பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கி, உள்ளாட்சி அமைப்புகளிலும் பணியிடங்களிலும் இடஒதுக்கீடு வழங்கிய மகளிர் முன்னேற்ற மாண்பாளர் - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் இந்தத் திட்டம் தொடங்கப்படுவதால், 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இது உங்களுக்கான உதவித் தொகை அல்ல, உரிமைத் தொகை, உங்களில் ஒருவனான ஸ்டாலின் வழங்கும் உழைப்புத் தொகை. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!“ எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!