Tamilnadu
அதிர்ச்சி சம்பவம்: சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த சொகுசு பேருந்து.. நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!
சென்னை கோயம்பேட்டில் இருந்து குளிர்சாதன வசதி கொண்ட சொகுசு பேருந்து ஒன்று பயணிகளுடன் பெங்களூர் நோக்கிச் சென்று கொண்டு இருந்தது. இப்பேருந்து சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக செம்பரம்பாக்கம் பகுதியில் சென்றது.
அப்போது முன்னாள் சென்ற பேருந்து திடீரென நின்றுள்ளது. இதனால் பின்னால் வந்த சொகுசு பேருந்து முன்னாள் இருந்த பேருந்து மீது மோதியுள்ளது. இதில் சொகுசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் பேருந்துதில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர்.
பிறகு, உடனே பயணிகள் பேருந்துதில் இருந்து வெளியேறினர். இதுபற்றி தகவல் அறிந்த உடனே விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பேருந்துதில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். ஆனால் தீ மளமளவெனப் பரவி பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்தில் பேருந்திலிருந்து பயணிகள் உடனே வெளியேறியதால் நூலிழையில் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர். தீ விபத்து காரணமாகச் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த பேருந்து விபத்து குறித்து ஆவடி போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!