Tamilnadu

பயனாளிகளாக 1 கோடி குடும்பங்கள்.. ”எத்திசையும் புகழ் மணக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” !

தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “மகளிருக்குச் சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி இடஒதுக்கீடு அளித்தது முதல், தற்போது கட்டணமில்லாப் பேருந்து பயணம் வழங்கியது வரை, மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் இவ்வரசு செயல்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

திமுக தேர்தல் அறிக்கையில் இதற்கான வாக்குறுதி வழங்கப்பட்டபோதே இதனை செயல்படுத்த முடியாது என்றும், தேர்தலுக்காக மக்களை திமுக ஏமாற்றுகிறது என்றும் விமர்சிக்கப்பட்டது. ஆனால், நிதிநிலை காரணமாக திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டம் நிறைவேற்றாமல் இருந்தது.

இந்த நிலையில், சொன்னதுபோலவே தற்போது இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுவோர், மாற்றுத் திறனாளி உதவித்தொகை பெறுவோர் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், மொத்தம் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இந்த திட்டத்தின் பயனாளிகளாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தற்போது ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 1 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் நேரடியாக பயன்பெறும் நிலையில், இந்தியாவின் மாபெரும் திட்டமாக இது போற்றப்பட்டு வருகிறது

Also Read: அமித்ஷாவுக்கு இந்தி மட்டுமே தெரியும் என்பதால்தானே இந்தியை திணிக்கிறார் - நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் !