Tamilnadu
குபுகுபுவென பற்றி எரிந்த கார்.. நூலிழையில் உயிர் தப்பிய தம்பதி: சாலையில் நடந்த பகீர் சம்பவம்!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் லைஜீ. இவர் தனது மனைவி நிகிதாவுடன் பெங்களூர் செல்வதற்காக நேற்று இரவு தனது காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் இவர்கள் இன்று காலை மதுரை - சேலம் தேசிய நெடுஞ்சாலை கரூர் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென காரின் முன்பகுதியிலிருந்து புகை வந்துள்ளது.
இதைக் கவனித்த லைஜீ உடனே காரை நிறுத்தியுள்ளார். பின்னர் இருவரும் இறங்கிய சில நிமிடத்திலேயே கார் தீ பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் அருகிலிருந்த கடையில் தண்ணீர் வாங்கி தீயை அணைக்க முயன்றனர்.
உடனே இந்த தீ பித்து குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.
இந்த தீவிபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை கார் தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?