Tamilnadu
“அதிபராக மோடி விரும்புகிறாரா? இது என்ன உங்க அப்பா வீட்டு சொத்தா?”: வெளுத்து வாங்கிய அமைச்சர் துரைமுருகன்!
தி.மு.க சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவின் மாநகர,மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநில செயலாளர் டாக்டர் சுபேர்கான் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.எம் மைதானத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், செஞ்சி மஸ்தான், திமுக துணைப்பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மேடையில் பேசிய அமைச்சர் துரைமுருகன் ;- “சிறுபான்மை என்பதை எண்ணிக்கையில் அடிப்படையில் பார்க்கக்கூடாது. இதயத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டும்.
திடீரென நாடாளுமன்றம் கூடுகிறது என்று சொல்கிறார்கள் எதற்கு என்று கேட்டால் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே ஆட்சி, ஒரே அதிபர் மோடி என்று சொல்லி இந்த நாட்டை அழித்துவிட பார்க்கிறார்கள். இது என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தா ? ஒரு வேளை சட்டமன்றத்தை கலைத்துவிட்டு அமெரிக்க அதிபர் போல் மோடி வர விரும்புகிறாரா என்று தெரியவில்லை.
ஒருவருக்கு இந்து மதம் பிடிக்கிறது, ஒருவருக்கு கிறிஸ்தவ மதம் பிடிக்கிறது,ஒ ருவருக்கு இஸ்லாமிய மதம் பிடிக்கிறது. அதற்காக இஸ்லாமியர்கள் இருக்கக் கூடாது என்று சொல்வதா ?
நம் நாட்டை ஆண்ட வெள்ளைக்காரர்கள் இந்தியா என்றார்கள், 70 ஆண்டு ஆட்சி செய்த காங்கிரஸ் இந்தியா என்றார்கள், நேற்று வரை இந்தியா என்று சொன்ன பாஜக இன்று பாரத் என்கிறார்கள்.
நான் சிறுபான்மையினர் என்ற தாழ்வான எண்ணம் உங்களுக்கு இருக்கக் கூடாது, நாம் சிறுபான்மையினர் அல்ல; தாழ்ந்தவர் அல்ல. இந்த மண்ணுக்குரியவர் என்ற தைரியம் உங்களுக்கு இருக்க வேண்டும். சிறுபான்மையினருக்கு எப்போது ஆபத்து வந்தாலும் திமுக தான் உடனே வந்து நிற்கும்.
சென்னை மாகாணத்தை தமிழர் வாழ்வதால் தமிழர் பண்பாடு கலாச்சாரம் உள்ள காரணமாக தமிழ்நாடு என மாற்றினோம்.பாரத் என மாற்றுவதற்கு என்ன இருக்கிறது? என்று கேள்வி எழிப்பினார்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!