Tamilnadu
“இந்தியா என்ற பெயரை மாற்றுவதா? - மோடி அரசு மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறது” : கனிமொழி MP ஆவேசம்!
நாடோடி பழங்குடிகளின் நிலை குறித்து மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் ஒர்க் மற்றும் வானவில் அறக்கட்டளை 8 மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வறிக்கையை சென்னை எழும்பூரில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் ஒர்க் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு ஆய்வறிக்கையை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி எம்.பி., “அரசியில் குரலை எழுப்பகூடிய எண்ணிக்கையில், அவர்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை இல்ல என்ற நிலை தான் உள்ளது. திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உறுதுணையாக கலைஞர் இருந்தார்கள்.
இன்று உள்ள தமிழ்நாடு அரசு என்பது அனைத்து மக்களுக்குமான அரசாக உள்ளது. அதிகாரிகள் செய்யவேண்டும் என நினைத்து அதிகாரத்தில் உள்ளவர்கள் போராடும் போதே கடினமான நிலையுள்ளது. சாதாரண மக்கள் என்றால் வாழ் நாள் முழுவதும் போராட வேண்டி உள்ளது. இதில் அவர்களுக்கு பெரிய தடை உள்ளது.
எல்லோரையும் ஒருங்கிணைத்து செயல்பட தான் இது போன்ற செயல்பாடுகள் வேண்டும். கலையப்படவேண்டிய குழப்பங்கள் உள்ளன அந்த புரிதல் நமக்கு வேண்டும். நிச்சயமாக என்னால் முடிந்த அளவிற்கு உங்களுக்கான குரலாக செயல்படுவேன்.
உங்கள் ஆய்வுகளை முதல்வரிடம் கொண்டு சேர்ப்பேன்; இன்றைய தமிழ்நாடு அரசு எல்லோருக்குமான எல்லோரைய அரவணைத்து எல்லாத்தையும் உருவாக்கவேண்டும் என்ற அரசு. தமிழ்நாட்டோடு இல்லாமல் இந்திய நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம். இந்தியா என்பதா என்பதிலேயே குழப்பம் உள்ளது ஆனால் நமக்கு என்றும் இந்தியா தான்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி, “இந்தியா என்ற பெயரை மாற்ற எண்ணி ஒட்டுமொத்த இந்திய மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறார்கள் , எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி நாட்டினுடைய பெயரையே மாற்றும் அளவிற்கு அவர்களை பயமுறுத்துகிறது” என்றார்
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?