Tamilnadu
அறநிலையத்துறையின் வரலாற்றில் ஒரு மைல் கல்.. 1,000வது குடமுழுக்கு விழாவை கொண்டாடும் தமிழ்நாடு அரசு!
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின் 1,000 -வது குடமுழுக்கு சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் 10.09.2023 அன்று நடைபெறுகிறது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், தமிழர்களின் கலைபண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் பெட்டகங்களான திருக்கோயில்களைப் புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்குகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில்1,000-வது குடமுழுக்காக சென்னை, மேற்கு மாம்பலம், அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் குடமுழுக்கு வருகின்ற 10.09.2023 அன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது என மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குடமுழுக்கு நடத்துதல், திருக்குளங்கள்.
திருத்தேர்கள் மற்றும் நந்தவனங்களை சீரமைத்தல்பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திரு கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல், திருக்கோயில்களின் வருவாய் இனங்களை முறைப்படுத்தி வசூலித்தல் போன்ற பல்வேறு பணிகளை செவ்வனே மேற்கொண்டு வருகிறது. திருக்கோயில்களில் ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிப்படி 12 குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்.
அதன்படி, குடமுழுக்குகள் நடைபெறாததிருக்கோயில்களை கண்டறிந்து திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தும் பணிகளை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த 26 மாதங்களில் இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் 400 ஆண்டுகளுக்கு பிறகும். காஞ்சிபுரம் மாவட்டம், சாத்தனஞ்சேரி, அருள்மிகு கரியமாணிக்க வரதராஜ பெருமாள் திருக்கோயில் சுமார் 300 ஆண்டுகளுக்கு பிறகும், இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம்தக்கோலம்அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில் சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகும், திருநெல்வேலி மாவட்டம்அரிகேசவநல்லூர்
அருள்மிகு பெரியநாயகி சமேத அரியநாத சுவாமி திருக்கோயில் 123 ஆண்டுகளுக்கு பிறகும், வேலூர் மாவட்டம், வெட்டுவானம், அருள்மிகு திரௌபதியம்மன் திருக்கோயில் 110 ஆண்டுகளுக்கு பிறகும், ஐந்து திருக்கோயில்கள் 100 ஆண்டுகளுக்கு பிறகும், ஆறு திருக்கோயில்கள் 70 ஆண்டுகளுக்கு பிறகும், 15 திருக்கோயில்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகும், 15 திருக்கோயில்கள் 30 ஆண்டுகளுக்கு பிறகும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 1,000 ஆண்டுகள் முற்பட்ட தொன்மையான திருக்கோயில்களை புனரமைத்து திருப்பணி மேற்கொள்ள 2022 – 2023 ஆம் நிதியாண்டில் ரூ.100 கோடியும், 2023 - 24 ஆம் நிதியாண்டிற்கு ரூ.100 கோடியும் அரசு மானியமாக வழங்கியுள்ளார்கள். அதன்படி 2022 2023 ஆம் - நிதியாண்டில் ரூ.140 கோடி மதிப்பீட்டில் 113 தொன்மையான திருக்கோயில்களும், 2023 - 24 ஆம் நிதியாண்டில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் 84 திருக்கோயில்களும் அரசு மானியம், திருக்கோயில் நிதி மற்றும் உபயதாரர்கள் பங்களிப்புடன் புனரமைத்து பாதுகாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட திருக்கோயில்களிலும், தருமபுர ஆதீனத்தை சேர்ந்த 27 திருக்கோயில்களில் 23 திருக்கோயில்களுக்கும் ஆண்டுகளில் குடமுழுக்கு நடத்திட அனுமதி 2 அளிக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவுற்று குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன.
கிராமப்புற திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள ஆண்டுதோறும் தலா 1,000 என்ற எண்ணிக்கை 1,250 ஆகவும், நிதியுதவி தலா ரூ.1 லட்சம் என்பது ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டு இதுவரை 2,500 கிராமப்புற திருக்கோயில்களுக்கும் 2,500 ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற திருக்கோயில்களுக்கு ரூ. 100 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. 2023 2024 ஆம் நிதியாண்டில் திருப்பணி மேற்கொள்வதற்கு 1,250 கிராமப்புற மற்றும் 1,250 ஆதிதிராவிடர்கள் (LD) பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற திருக்கோயில்களை கண்டறியும் பணி நடைபெற்று வருகின்றது.
மாநில அளவிலான வல்லுநர் குழுவால் 7,142 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளன. அதில் 2,235 திருக்கோயில்களில் ரூ.1,120 கோடி மதிப்பீட்டிலான 5,855 திட்ட மதிப்பீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்படி திருக்கோயில்களை மேம்படுத்தும் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு அனைத்து தரப்பினரும் போற்றிடும் வகையில் செயலாற்றி வரும் இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக 1,000 - வது குடமுழுக்காக நடைபெறும் சென்னை, மேற்கு மாம்பலம், அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழாவில் சமய சான்றோர்கள், ஆன்மிகவாதிகள் மற்றும் இறையன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பதோடு ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது” தெரிவித்துள்ளார்.
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!