Tamilnadu

குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்பட்டு, வருகை பதிவு அதிகரித்துள்ளது.. காலை உணவு திட்டத்தை பாராட்டிய தி இந்து !

தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 7.5.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விதி 110-ன் கீழ் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மகத்தான திட்டத்தை நாடு முழுவதும் இருந்து பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் ஆங்கில பத்திரிகைகளும் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறது.

இந்த சூழலில் தற்போது இந்த பட்டியலில் தி இந்து ஆங்கில இதழும் சேர்ந்துள்ளது. இது குறித்து தி இந்து ஆங்கில இதழில் வெளிவந்த கட்டுரையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் ஊட்டச்சத்து பிரச்சினை நீங்கி, உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு பள்ளிகளை நம்பியுள்ள ஏழைமக்கள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் குடும்பத்தை சேர்ந்த தாய் தந்தையர், அதிகாலையில் எழுந்து பசியோடு அன்றைய தின வேலைக்கு சென்றுவிடும் நிலையில், அவர்களின் குழந்தைகள் காலை நேரத்தில் அதே பசியுடன் பள்ளிக்கு வந்து கல்வி பயிலும் நிலை இருந்தது. இதனால் அவர்களின் குழந்தைகளும் பசியோடு பள்ளிகளுக்கு வரும் நிலை இருந்தது. இதனால் ஊட்டச்சத்து குறைபாடுகளை மாணவர்கள் சந்திப்பதாக அரசுக்கு அறிக்கை வந்தது.

அதனைத் தொடர்ந்து, இதற்கு தீர்வு காணும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, இந்தியாவிலேயே முதல்முறையாக அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின்கீழ், 1முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சுமார் 1 லட்சத்து 14 ஆயிரம் பேருக்கு சுவையான காலை உணவுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் காரணமாக பள்ளியில் பசி மயக்கத்தோடு இருக்கும் குழந்தைகளின் கவலைகள் தீர்ந்துள்ளது. மேலும், அரசு தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் ஆரோக்கியமும், அவர்களின் ஊட்டச்சத்து பற்றாக்குறையும் மேம்பட்டுள்ளது.

இந்த திட்டம் ஜூலை மாதம் முதன்முதலில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட 4 மாவட்டங்களில் உள்ள 1,545 அரசு தொடக்க பள்ளிகளில் 1,319 பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் மாணவர்களின் வருகை பதிவேடு 85 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளதாகவும், வருகை பதிவேடு 2 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் ஹிந்து நாளேடு தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

Also Read: 'ஒரே நாடு– ஒரே தேர்தல்': "ஆதரவு தெரிவித்து பலிகடா போல தலையை கொடுக்கிறது அதிமுக".. முதலமைச்சர் விமர்சனம் !