Tamilnadu
சனாதன ஒழிப்பு மாநாடு : சர்ச்சை கருத்து பதிவிட்ட பாஜக நிர்வாகி.. 4 பிரிவுகளில் கைது செய்த போலிஸ் !
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் இன்று 'சனாதன ஒழிப்பு மாநாடு' நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, தி.க. தலைவர் கி.வீரமணி, முன்னணி எழுத்தாளர்கள், கருத்தாளர்கள் மக்கள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
இந்த சனாதன ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு, இந்த மாநாடு எதற்கு நடக்கிறது என்பதற்காக சனாதன விளக்கப் பொதுக்கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெற்றது. எனவே சனாதன விளக்க பொதுக்கூட்டத்துக்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இதில் கலந்துகொள்ள மார்த்தாண்டத்திற்கு சென்ற பால பிரஜாபதிக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பாஜக தரவுதள மேலாண்மை பிரிவு மாவட்ட செயலாளர் உமேஷ் என்பவர் ஒழிப்பு மாநாட்டிற்கு வருகை தர இருந்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டார். குறிப்பாக பால பிரஜாபதி குறித்து அவதூறாக பேசியிருந்தார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பாஜக நிர்வாி உமேஷ் மீது இது குறித்து அதே பகுதியை சேர்ந்த தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயமோகன் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து விரிகோடு பாஜக தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட செயலாளர் உமேஷ் மீது, இரு பிரிவினரிடையே மோதல் உருவாக்குதல், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துதல், மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். சமூக வலைதளத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் சர்ச்சை கருத்து பதிவிட்ட பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!