Tamilnadu
“மோடியால் சங்கராச்சாரியாரை தொட கூட முடியாது.. அதுதான் சனாதனம்” : பீட்டர் அல்போன்ஸ் பேச்சு!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் 'சனாதன ஒழிப்பு மாநாடு' நடைபெற்றது. இந்த மாநாட்டில் சனாதன ஒழிப்பில் ஒத்த கருத்துகளையுடைய அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், முன்னணி எழுத்தாளர்கள், கருத்தாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற 'சனாதன ஒழிப்பு' மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், “தேசத்தை இருளின் பிடியில் இருந்து அகற்ற வேண்டும் என்றால் எதையும் எதிர்பார்க்காத செயல் வீரர்களால் தான் முடியும்.
மோடி தினசரி ஒரு நாட்டிற்கு செல்கிறார். வெளிநாட்டு தலைவர்களையும் உலக மதங்களின் மதக்குருக்களை எல்லாம் கட்டிக்கொள்கிறார். ரோமன் கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் முதல் அரேபிய நாட்டு மன்னர்கள் வரை அனைவரையும் கட்டி அணைக்க முடிந்த சர்வ வல்லமை படைத்த பிரதமர் மோடியால், காஞ்சி மடத்தில் உள்ள சங்கராச்சாரியாரை கட்டி பிடிக்க முடியுமா? அது தான் சனாதனம்.
ஆயிரம் ஆண்டுகளாக போராடி வந்தாலும், சனாதனம் இன்றளவும் இருக்கிறது. சனாதனத்தை அழிக்க வேண்டிய கட்டாயம் இன்றைக்கு ஏன் வந்திருக்கிறது என்றால், நீதிமன்றங்களில் இன்றைக்கு வரும் தீர்ப்புகள் எல்லாவற்றையும் பார்த்து பதற வேண்டியுள்ளது.
மனு நீதியை மேற்கொள் காட்டி தீர்ப்பிடுகின்ற நீதிமன்ற அவலங்கள் நடைபெற்று வருகிறது. நாட்டு மக்களுடைய வெறுப்பை தூண்டிவிட்டு,சனாதனத்தின் பெயரில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கூட நடக்காத கொடுமைகள் இன்றைக்கு நடக்கிறது.
மேலும், பட்டியலின மக்கள் மீது சிறுநீர் கழிப்பது, பெண்களை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுப்பது போன்ற செயல்களை பா.ஜ.க, அரசாங்கம் சனாதனத்தின் பெயரில் நடத்தி கொண்டிருக்கிறார்கள். சனாதன கும்பலின் ஆயுதமாக மோடி உள்ளார்.
இந்த தேர்தலில் சனாதன வேறுகளை அகற்ற வேண்டும். இளைஞர்கள் மக்களிடையே சமூக வலைதளங்கள் மூலம் பா.ஜ.க அரசின் அவலங்களை எடுத்து சொல்லி இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையை நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!