Tamilnadu
“சனாதனம் குறித்து நான் பேசியது சரியானதே..” : வதந்தி பரப்பும் பாஜக கும்பலுக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி !
மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் (MCC) - முருகப்பா குழுமம் இணைந்து நடத்தும் 94 ஆவது அகில இந்திய எம்.சி.சி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் கடந்த ஆகஸ்ட் 24 ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.
இதில் தமிழ்நாடு ஹாக்கி யூனிட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் ஆர்மி,ஹாக்கி கர்நாடக, இந்தியன் ரயில்வேஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்த தொடரில் இந்தியன் ரயில்வேஸ் அணி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியையும், ஹாக்கி கர்நாடக அணி இந்தியன் ஆர்மி அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இதில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியன் ரயில்வேஸ் ஹாக்கி கர்நாடக அணிகள் மோதின. இதில் இந்தியன் ரயில்வேஸ் அணி 5-2 என்ற கோல் கணக்கில் ஹாக்கி கர்நாடக அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
94 ஆவது அகில இந்திய மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் - முருகப்பா குழுமத்தின் தங்கக் கோப்பை ஹாக்கி தொடர் போட்டியின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்தியன் ரயில்வேஸ் அணிக்கு ஏழு லட்சம் ரூபாய் பரிசு தொகையும், வெற்றி சுழற்கோப்பையும், இரண்டாம் இடம் பிடித்த ஹாக்கி கர்நாடக அணிக்கு ஐந்து லட்சம் பரிசு தொகையும் சுழற்கோப்பையும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கூறியதாவது, “ஒட்டு மொத்த இந்தியாவே சனாதனம் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறது. இன்னமும் பேச வேண்டும். நான் சொன்னது போல் நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது, Genocide என நான் சொன்னதாக பயித்தியக்காரத்தனமாக சிலர் பேசுகின்றனர். சனாதனம் கோட்பாடு ஒழிக்க வேண்டும் என்று தான் பேசினேன். திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள் சிலர். அதற்கு திமுகவினரை எல்லாம் கொலை செய்வதாக அர்த்தமா.
எல்லாருக்கும் எல்லா கிடைக்க வேண்டும் என்பதே திராவிட கொள்கை. முன்பு பெண்கள் படிக்க கூடாது. மேலாடை அணிய கூடாது. இதையெல்லாம் மாற்றியதே திராவிட மாடல், வேண்டுமென்று பாஜகவினர் போலி செய்தி பரப்புகின்றனர். இந்தியா கூட்டணி கூட்டம் வெற்றியடைந்ததை திசைதிருப்பவே பாஜகவினர் இப்படி செய்கின்றனர். வதந்திகள் பரப்புவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
எனக்கு மதம் ஜாதி போன்றவற்றில் நம்பிக்கை இல்லை, ஒன்றே குலம் ஒருவனே தெய்வம். சனாதானம் குறித்து அதிமுக நிர்வாகிகளிடம் கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள். சாதிய மத பாகுபாடு நீங்க வேண்டும் என நான் பேசியது குறித்து அதிமுகவினரிடம் கருத்து கேளுங்கள்.
சீமான் எப்போதும் உணர்ச்சிவசமாக பேசுவார் அவ்வளவே, திராவிட கட்சிகள் சகோதரர்கள் என பேசியது குறித்து நான் பார்க்கவில்லை. பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுவதாக சொல்வது நிச்சயமில்லாதது. தேர்தல் அறிவிக்கட்டும் அப்போது தைரியமிருந்தால் மோடி தமிழ்நாட்டில் போட்டியிடட்டும். இப்போது யுகத்தின் அடிப்படையில் பேச வேண்டாம்” என தெரிவித்தார்.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!