Tamilnadu
அண்ணாமலை யாத்திரை சுவர் விளம்பரத்தில் தகராறு.. அரசு ஊழியரை தாக்கிய பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது !
சங்கரன்கோவிலில் பாஜக தலைவர் அண்ணாமலை யாத்திரை சுவர் விளம்பரம் சம்பந்தமாக நெடுஞ்சாலை பணியாளர்களை தாக்கிய பாஜக நிர்வாகிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புளியங்குடி செல்லும் சாலையில் நெடுஞ்சாலை துறை பாலத்தில் பாஜவினர் சுவர் விளம்பரம் செய்திருந்தனர். இந்நிலையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வரவிருப்பதால் நெடுஞ்சாலை துறை க்கு உட்பட்ட சுவர்களில் எழுதப்பட்ட சுவர் விளம்பரம் அழிக்கபட்டு வருகிறது.
இதனிடையே புளியங்குடி சாலையில் உள்ள பாலத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை யாத்திரை குறித்த சுவர் விளம்பரத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் அளித்தனர்.
அப்போது அங்கு வந்திருந்த பாஜக சங்கரன்கோவில் நகர பொறுப்பாளர் விக்னேஷ் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது நெடுஞ்சாலை துறை பணியாளர் சங்கரபாண்டினுக்கும் பாஜக-வை சேர்ந்த விக்னேஷுக்கும் வாக்குவாதம் தள்ளுமுள்ளாக மாறியது.
இதில் இருவரும் காயம் அடைந்ததாக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் இது குறித்து சங்கரன்கோவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை பணியளர்களை தாக்கியதாக பாஜக நிர்வாகிகள் கணேசன், விக்னேஷ் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!