Tamilnadu
“பிரதமர் விமானம் இல்லாமல் கூட செல்வார்; அதானி இல்லாமல் செல்லமாட்டார்”: மோடியை கலாய்த்த அமைச்சர் உதயநிதி!
மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்ட திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில், மயிலாடுதுறை கலைஞர் திட்டத்தில் நடைபெற்றது.
டிசம்பர் 17ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணியின் 2 வது மாநில மாநாடு குறித்தும், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு திமுக தலைமை சார்பில் இளைஞரணிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள் குறித்தும் ஆயிரக்கணக்கான இளைஞரணியினர் முன்னிலை சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் இளைஞர் அணி மாநாட்டிற்கு மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் ரூபாய் 15 லட்சத்திற்கான காசோலையும், மயிலாடுதுறை மாவட்ட இளைஞரணி சார்பில் அமைப்பாளர் மருது 5 லட்சத்திற்கான காசோலையும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார், தொடர்ந்து பல இளைஞர் அணி நிர்வாகிகள் மாநாட்டிற்கான நிதியினை அமைச்சரிடம் வழங்கினர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”இந்த மயிலாடுதுறை மாவட்டம் எனக்கு மிக நெருக்கமான மாவட்டம். நான் சட்டமன்ற தேர்தலில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய பொழுது முதலில் கைது செய்யப்பட்டது மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் தான்.
நீங்கள் அன்பளிப்பாக பூங்கொத்து, சால்வைகள் வழங்குவதையும், பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், அதற்கு பதிலாக கழக இருவண்ண நிறம் கொண்ட வேஷ்டிகளையும், புத்தகங்களையும் வழங்குங்கள். அந்த வேஷ்டி கழக மூத்த முன்னோடிகளுக்கும், புத்தகங்கள் நூலகங்களுக்கும் வழங்கப்படும்.
சமீபத்தில் ஒரு மாநாடு நடைபெற்றது, எப்படி ஒரு மாநாடு நடைபெறக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக அதிமுகவின் மாநாடு அமைந்திருந்தது. அந்த மாநாட்டில் புளிசாதம், தயிர் சாதம் எப்படி இருந்தது என்று தான் பேசினர். மேலும் அந்த மாநாட்டில் சென்ற தன் மனைவியை காணவில்லை என காவல்துறையிடம் ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்த அளவிற்கு மாநாடு நடத்தி உள்ளனர்.
நமது அரசு மக்களுக்கான திட்டங்களான மக்களை தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48, இல்லம் தேடி கல்வி, மகளிருக்கு பேருந்து இலவச பயணம், நேற்று இந்திய வரலாற்றிலேயே சிறப்புமிக்க திட்டமான காலை சிற்றுண்டி திட்டம், மேலும் இன்னொரு வரலாற்று சிறப்புமிக்க திட்டமாக பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமை திட்டம் போன்ற திட்டங்களை செய்து வருகிறது.
நாம் எதிர்க்கட்சியாக இருந்த பொழுது மக்களுக்கு எதிராக நடைபெறும் ஒவ்வொரு விஷயத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தியுள்ளோம். தற்பொழுது மக்களுக்கு எதிராக நடைபெறும் நீட் தேர்வை கண்டித்து அதிமுக எதிர்க்கட்சியாக இருந்து போராட்டம் நடத்தி இருக்க வேண்டும். ஆனால் ஆளுங்கட்சியாக இருந்தும் நாம் தான் போராட்டம் நடத்தியுள்ளோம். நீட்க்கு எதிராக அவர்கள் தீர்மானம் கூட நிறைவேற்ற வேண்டாம் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யலாம்.
நீட் தேர்விற்காக அனைவரும் போராட வேண்டும். அதிமுகவினரின் இந்த போராட்டத்திற்கு நான் அழைக்கிறேன். அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூட வர வேண்டாம். அந்தக் கட்சியின் இளைஞரணிச் செயலாளரும் மாணவர் அணி செயலாளரும் போராட்டத்தில் கலந்து கொள்ளட்டும் பிரதமர் இல்லம் முன்பாக சென்று போராடுவோம், அப்படி அந்த போராட்டத்திற்கு கிடைக்கும் வெற்றியின் முழு பெயரையும் அதிமுகவினரை எடுத்துக் கொள்ளட்டும்.
20 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வு எதிராக நான் நடத்திய உண்ணாவிரத போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றது. போராட்டம் தான் வெற்றி பெற்றுள்ளது நீட் தேர்வில் இருந்து நமக்கு இன்னும் வெற்றி கிடைக்கவில்லை நமது போராட்டம் தொடரும்.
பிரதமர் விமானம் இல்லாமல் கூட பயணம் செய்வார், ஆனால் அதானி இல்லாமல் எங்கும் பயணம் செய்ய மாட்டார். இந்த பாஜக ஆட்சியில் மக்கள் யாரும் வளர்ச்சி பெறவில்லை. அதானி குழுமத்தின் சொத்துக்கள் தான் வளர்ச்சி பெற்று உள்ளது. அதானி விமான நிலையம், ரயில்வே, விளையாட்டு மைதானம், துறைமுகம் என அனைத்திலும் அதானி அதானி என உள்ளன.
பண மதிப்பிற்கு நடவடிக்கையால், இந்தியாவின் கருப்பு பணம் முழுவதுமாக ஒழிக்கப்படும் என தெரிவித்த ஒன்றிய அரசு, இதுவரை எவ்வளவு கருப்பு பணத்தை ஒழித்துள்ளனர். ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் போடுவதாக தெரிவித்தனர் இதுவரை 15 காசாவது போட்டுள்ளனரா” என தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!