Tamilnadu

Ban NEET : பதாகைகளுடன் போராட்ட களத்துக்கு வந்த புதுமண தம்பதி.. கழக அணிகளின் போரட்டத்தில் ஸ்வாரஸ்யம் !

மாணவர்களை மட்டுமன்றி, பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளும் நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், பொறுப்பற்ற ஆளுநரையும் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும், இன்று மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரத அறப்போர் நடைபெற்று வருகிறது. தி.மு.கழக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணிகள் கூட்டாக நடத்தும் போரட்டத்தில் பலரும் பங்கேற்று வருகின்றனர்.

அதன்படி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் கழக பொதுச்செயலாளர் துரைமுருகன், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவர் அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.

இந்த அறப்போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், மருத்துவர்கள், மருத்துவம் படிக்கும் மாணவர்கள் என திரளானோர் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த அறப்போராட்டத்துக்கு மக்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து வரும் நிலையில், புதுமண தம்பதியும் பங்கேற்று தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

திமுக விவசாய அணி துணை செயலாளராக இருந்து வருபவர் அரியப்பன். இவரது மகன் அன்பானந்தம் என்பவருக்கு ஸ்வர்ண பிரியா என்ற இளம்பெண்ணொடு இன்று திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி இன்று முதல்வரின் முகாம் அலுவலகத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு நீட்டுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

திருமணம் முடிந்த உடனே அங்கிருந்து தனது மனைவி ஸ்வர்ண பிரியாவுடன் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் நீட் தேர்வுக்கு எதிரான கழக அணிகளின் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

அவர்கள் வரும்போதே 'Ban NEET' என்ற வாசகம் பொருந்திய நீட்டுக்கு எதிரான பதாகைகளையும் கொண்டு வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த தம்பதிக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: அன்று இந்தி திணிப்பு - இன்று நீட் திணிப்பு : “மக்கள் விடும் சாபத்தால் ஒன்றிய அரசு வீழும்” - துரைமுருகன்!