Tamilnadu
Fail ஆனதால் பெற்றோருக்கு பயந்து புத்தகத்தை விற்று ரயிலேறிய சிறுவர்கள் : போலீசாரின் செயலுக்கு பாராட்டு !
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் வாயிலில் 12 வயது உடைய இரண்டு சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அருகில் சென்று யார் நீங்கள் என்று சிறுவர்களிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
அப்போது அந்த மாணவர்கள் எதுவும் கூறாமல் பயந்த நிலையிலே அமையாக நின்றுள்ளனர். பின்னர் இரண்டு பேரையும் பூக்கடை காவல் நிலையம் அழைத்துச் வந்து விசாரித்தனர். பூக்கடை காவல் நிலையத்தில் மாணவர்களுக்கு உணவுகளை வாங்கி கொடுத்த பின் விசாரணை மேற்கொண்டதில் சிறுவர்கள் கோயம்புத்தூர் வேலவன் நகர் மற்றும் மாணிக்கவாசகம் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
மேலும், கணக்கு பாடத்தில் தோல்வியடைந்ததால் பெற்றோர்கள் கண்டிப்பார்கள் அடித்து விடுவார்கள் என்று பயந்ததாக சிறுவர்கள் கூறியுள்ளனர். அதோடு புத்தகங்களை பழைய கடையில் போட்டு அதன் மூலம் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு நேற்று இரவு கோவையில் சென்னைக்கு வரக்கூடிய ரயில் மூலம் ஏறி காலை சென்னை வந்து இறங்கியதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் காவல் துறை அதிகாரிகளிடம் விசாரணை செய்தபோது ஏற்கனவே மாணவர்கள் காணாமல் போனது குறித்து புகார் அளிக்க பெற்றோர்கள் வந்துள்ளதாக கூறியுள்ளனர். அதனைத் அடுத்து பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கோயம்புத்தூரில் இருந்து சென்னை வந்த பெற்றோர்களிடம் மாணவர்களை பத்திரமாக பூக்கடை போலீசார் ஒப்படைத்தனர்.போலீசாரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!