Tamilnadu
”இந்தியா கூட்டணியை பார்த்து அச்சப்படும் மோடி - பா.ஜ.க கும்பல்".. CPI தேசிய செயலாளர் டி.ராஜா கடும் சாடல்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு மற்றும் மாநிலக்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் டி.ராஜா கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜா, "ஒரு நாட்டின் பிரதமர் என்பதை மறந்து சுதந்திர தின விழாவை பா.ஜ.கவின் தேர்தல் பிரச்சாரமாக நரேந்திர மோடி பயன்படுத்திக் கொண்டார்.
தேர்தல் நேரத்தில் பா.ஜ.க கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா? என்பதைப் பிரதமர் முதலில் எண்ணிப்பார்க்க வேண்டும். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, கருப்புப் பணத்தை ஒழித்து அனைவரது வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் செலுத்துவேன் என்று சொன்ன வாக்குறுதிகள் என்னானது?. மணிப்பூர் வன்முறையில் மக்கள் பிளவு படுத்தி அரசியல் லாபத்தைத் தேடவே பா.ஜ.க முயல்கிறது.
இவர்களிடம் சிக்கித் தவித்து வரும் இந்திய நாட்டை காப்பாற்றுவதற்காகத்தான் இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது. இந்தியா கூட்டணியின் அடுத்தடுத்த நடவடிக்கைகளைப் பார்த்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடுதான் நேற்று செங்கோட்டையில் பிரதமர் மோடியின் பேச்சு அமைந்துள்ளது.
பெண்களின் நிலையை உயர்த்துவது தொடர்பாக மோடி பேசியதைப் பெண்களே ஏற்றுக் கொள்ளவில்லை. பெரும்பான்மை மிக்க பா.ஜ.க தற்போது பெண்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான சட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பது ஏன்?
ஆர்.என். ரவி தமிழ்நாட்டினால் ஆளுநர் பதவியில் அமர்ந்து கொண்டு சனாதனத்தைப் பற்றிப் பேசி வருகிறார். இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கே அதிகாரிம் உள்ளது.
ஆளுநர் என்றும் இவர் மக்கள் பிரதிநிதிகள் அளித்த மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பை மட்டுமே உடையவர். ஆளுநர் அகற்றப்பட வேண்டும் என்பதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு" என தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!