Tamilnadu

#BeTheBetterGuy : சாலையில் செல்லும்போது பின்பற்றவேண்டியது என்ன ? -விழிப்புணர்வை ஏற்படுத்திய Hyundai !

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனந்தமாக உள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் அதிக கார்களை விற்பனை செய்து ஒவ்வொரு ஆண்டும் சாதனை படைத்தது வருகிறது. மேலும், உலகளவிலும் தங்கள் கார்களை ஏற்றுமதி செய்தும் வருகிறது.

இப்படி மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஹூண்டாய் நிறுவனம் சாலை விதிமுறைகளை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கடந்த 5 ஆண்டுகளாக #BeTheBetterGuy எனும் விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்தி வருகிறது.

அந்த வகையில், தற்போது கலைஞர் செய்திகள் நிறுவனத்தோடு இணைந்து இந்தாண்டுக்கான #BeTheBetterGuy ( Buckle up, Young India ) விழிப்புணர்வு பிரசாரத்தை ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் மேற்கொண்டுள்ளது. அதன்படி, சாலைகளில் நடந்து செல்லும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும், வாகனங்களில் செல்வோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்தும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் வலியுறுத்தப்படுகிறது.

அதில் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் சாலை விதிகளை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்தும், அப்படி சாலை விதிகளை முறையாக பின்பற்றாத பொதுமக்களுக்கு அது குறித்த விழிப்புணர்வும் வழங்கப்பட்டது

மது அருந்தி வாகனம் ஓட்டக் கூடாது.

சாலையில் செல்லும்போது மது அருந்தி வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம் என்பதோடு அது நம்மை தாண்டி பிறரையும் பாதிக்கும் தன்மை கொண்டது. மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஓட்டுனரின் கவனம் சிதறி அது நிச்சயம் விபத்துக்கு வழிவகுக்கும்.

பாதசாரிகளுக்கு வழி விடவேண்டும்.

சாலை என்பது வாகனங்களுக்கு மட்டுமின்றி பாதசாரிகள் கடப்பதற்கும் உரிமையானதாகவும். சாலையில் வெள்ளை நிற கோடுகள் இடைவெளி விட்டு போடப்பட்டிருந்தால் அது பாதசாரிகள் கடக்கும் பகுதியாகும். அந்த இடத்தில் வாகன ஓட்டிகள் மெதுவாக, சாலை சிக்னல்களை கவனித்து பாதசாரிகளுக்கு சாலையை கடக்கும்வண்ணம் செல்ல வேண்டும். அதே நேரம் பாதசாரிகளும் சிக்னல்களை கவனித்து சாலையை கடக்க வேண்டும்.

வாகனத்தை அதிவேகத்தில் இயக்கக்கூடாது.

வாகனம் அடிக்கடி விபத்துக்குள்ளாவதற்கு அதிவேகமே முக்கிய காரணமாக திகழ்கிறது. மெதுவாக வரும்போது விபத்து நேர்ந்தால் கூட அதிக காயத்தின் அளவை பெரிதாக்குவதில்லை. அதே நேரம் வேகமாக வந்து விபத்து நேர்ந்தால் அது உயிர்பலியை ஏற்படுத்தும் அளவு மோசமான விபத்தாக மாறுகிறது. இதனால் சாலையில் செல்லும்போது அனுமதிக்கப்பட்ட வேகத்தில் சென்றால் அதனால் ஏற்படும் விபத்துக்களையும் குறைக்க முடியும்.

Also Read: 'சன்ஹிதா', 'சாக்‌ஷியா'.... - சட்டங்களின் பெயரை இந்தியில் மாற்றும் பாஜக அரசு.. முதலமைச்சர் கடும் கண்டனம் !