Tamilnadu
நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்.. தீப்பிடித்து எரிந்த பேருந்து: கண்ணாடியை உடைத்து உயிர் தப்பிய பயணிகள்!
கர்நாடக மாநிலம் தும்பகால என்ற பகுதியிலிருந்து சென்னை நோக்கி சொகுசு பேருந்து ஒன்று 22 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. இப்பேருந்து சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது லாரி மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. பேருந்திலிருந்த பயணிகள் அலறியடித்துள்ளனர். பின்னர் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்து ஒவ்வொரு பயணியாக வெளிவந்து உயிர் தப்பியுள்ளனர். இவர்கள் வெளிய வருவதற்கு அப்பகுதி மக்கள் உதவி செய்துள்ளது.
அதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து அருகே இருந்த லாரியிலும் பரவியது. இரண்டு வாகனங்களும் கரும் புகையுடன் எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீயை அனைத்தனர். இந்த தீவிபத்து காரணமாகச் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 5 கிலோ மீட்டர் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்