Tamilnadu
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் : டோக்கன் மற்றும் விண்ணப்பங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ன ?
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக சார்பில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத் தொகைக்கான பட்ஜெட் அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் நகர்புற பகுதிகளுக்கு டோக்கன் மற்றும் விண்ணப்பங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது
வழிகாட்டு நெறிமுறைகள் என்ன ?
தலைமைச் செயலாளர் அவர்களின் ஆய்வுக் கூட்டத்தல் கிராமப்புற பகுதிகளில் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டதில் காணப்பட்ட குறைபாடுகளை களைந்து நகர்புற பகுதிகளுக்கு விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் குறித்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பங்கள் 01.08.2023 முதல் 04.08.2023 ஆகிய நான்கு தினங்களுக்குள் முழுமையாக விநியோகம் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு நியாயவிலைக்கடைக்கும் தனித்தனியாக விற்பனையாளர்கள் நியமனம்
செய்யப்பட்டு குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்ப விநியோகத்தை முடிக்க வேண்டும்.
500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு நாளைக்கு 60 வீதமும், ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு ஒரு நாளைக்கு 120 வீதமும், 1500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு நாளைக்கு 180 விதமும், 2000 குடும்ப அட்டைகளுக்கு ஒரு நாளைக்கு விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும்.
எந்தெந்த பகுதிகளுக்கு எந்தெந்த நாட்களில் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்கப்படவுள்ளது என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு, அதன்படி விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும்.
இவ்விபரம் சம்பந்தப்பட்ட நியாயவிலைக்கடையில் தெளிவாக குறிப்பிடப்பட்டு Standard போஸ்டரில் வெளியிடப்பட வேண்டும்.
ஒரு நாளைக்கான 60 டோக்கன்களை ஒட்டுமொத்தமாக அனைத்து பகுதிகளுக்கும் விநியோகம் செய்யாமல் ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதியாக பிரித்து டோக்கன் வழங்க வேண்டும்.
விண்ணப்பங்களில் குடும்ப அட்டை எண் தவறாமல் எழுதப்பட வேண்டும். எழுதுவதற்கு இடம் தனியே ஒதுக்கப்பட்டுள்ளது.
டோக்கன்களில் முகாம் நடைபெறும் நாள், நேரம் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். நேரத்தை பொருத்தவரை காலை அல்லது மதியம் என்று பொதுவாக குறிப்பிடுவதை தவிர்த்து ஒவ்வொரு மணி நேர இடைவெளியில் நேரம் குறிப்பிடப்பட வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு டோக்கன் விநியோகம் செய்யும்போது அப்பகுதியில் இறப்பு, வீட்டில் ஆள் இல்லாதவர்கள், விண்ணப்ப படிவம் வேண்டாம் என மறுப்பு தெரிவிப்பவர்கள் விவரங்களை அவ்வப்போது குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட முகாமிற்கு ஒரு நாளைக்கு எத்தனை டோக்கன்கள் வழங்கப்பட்டது. அதில் எத்தனை நபர்கள் முகாமிற்கு வருகை புரிந்துள்ளனர் என்பது போன்ற விவரங்கள் மாநில அளவில் அன்றாடம், மிகவும் நுணுக்கமாக கண்காணிக்கப்படுவதால், முகாமிற்கு தேவையான அளவை விட கூடுதலாகவோ குறைவாகவோ டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!