Tamilnadu
#BeTheBetterGuy : சாலையில் செல்லும்போது செய்யவேண்டியது என்ன? விழிப்புணர்வை ஏற்படுத்திய ஹூண்டாய் நிறுவனம்!
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனந்தமாக உள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் அதிக கார்களை விற்பனை செய்து ஒவ்வொரு ஆண்டும் சாதனை படைத்தது வருகிறது. மேலும், உலகளவிலும் தங்கள் கார்களை ஏற்றுமதி செய்தும் வருகிறது.
இப்படி மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஹூண்டாய் நிறுவனம் சாலை விதிமுறைகளை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கடந்த 5 ஆண்டுகளாக #BeTheBetterGuy ( Buckle up, Young India ) எனும் விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்தி வருகிறது.
அந்த வகையில், தற்போது கலைஞர் செய்திகள் நிறுவனத்தோடு இணைந்து இந்தாண்டுக்கான #BeTheBetterGuy விழிப்புணர்வு பிரசாரத்தை ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் மேற்கொண்டுள்ளது. அதன்படி, சாலைகளில் நடந்து செல்லும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும், வாகனங்களில் செல்வோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்தும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் வலியுறுத்தப்படுகிறது.
அதில் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் சாலை விதிகளை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்தும், அப்படி சாலை விதிகளை முறையாக பின்பற்றாத பொதுமக்களுக்கு அது குறித்த விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
சாலையில் இருக்கும் சிக்னல்களை பின்பற்ற வேண்டும்:
மஞ்சள் நிறத்தில் இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிவப்பு நிறத்தில் இருந்தால் சாலையில் இருக்கும் வெள்ளை நிற கோடுகளுக்கு பின்னர் நிற்கவேண்டும். அதன்பின் பச்சை நிறம் எரிந்தால் வாகனத்தை அதற்குரிய வழியில் செலுத்தவேண்டும்.
தலைக்கவசம் அணிய வேண்டும்.
சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில் பலர் தலைகவசம் அணியாதவர்கள்தான் என ஆய்வுகள் சொல்கிறது. அதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சரியான முறையில் தலைக்கவசத்தை அணிய வேண்டும்.
காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணியவேண்டும்.
காரில் செல்லும் பயணிகள் நிச்சயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் விபத்துகளின் போது, பாதிப்புகளை தவிர்க்கலாம்.
சாலையில் செல்லும் போது செல்போன் பயன்படுத்தகூடாது.
சாலையில் செல்போன் பயன்படுத்துவதால் கவன சிதறல் ஏற்பட்டு பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக சாலையில் வரும் பிறரும் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலையில் செல்லும்போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.
ஆம்புலன்ஸ்க்கு வழிவிட வேண்டும்.
அவசரமாக சாலையில் ஹோரனை ஒலிக்கவிட்ட செல்லும் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடவேண்டியது முக்கியமான செயலாகும். ஒரு உயிரையோ, ஒரு உயிரை காப்பாற்றவோ செல்லும் அம்புலன்ஸின் வழியை மறிக்காமல் அதற்கு வழியை ஏற்படுத்தி கொடுத்து நான் அதன் பின்னர் செல்லவேண்டும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!