Tamilnadu
போலிசார் சோதனையில் சிக்கிய 48 கிலோ புகையிலை, மசாலா போதைப் பொருள்கள்.. நாம் தமிழர் நிர்வாகி அதிரடி கைது !
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரியக்குடி ரயில்வே கேட் பாண்டியன் என்பவர் பெட்டி கடை ஒன்று நடத்தி வந்துள்ளார். இங்கே தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. அதன்பேரில் ASP ஸ்டாலின் தலைமையிலான காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சிலர் அங்கே நின்று கொண்டிருந்தனர். எனவே அவர்கள் மீது சந்தேகப்பட்ட போலீசார், அவர்களிடம் விசாரித்தனர். அப்போது நாம் தமிழர் கட்சி சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் சோமு துரைப்பாண்டி என்றும், சண்முகம் என்றும், மற்றொருவர் சற்குணம் என்றும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் சோதனை மேற்கொண்டதில் அவர்கள் சாக்கு மூட்டைகள் வைத்திருந்தனர்.
அதனை சோதனை செய்தபோது புகையிலை, பான் மசாலா மற்றும் சில போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து சுமார் 48 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை காரைக்குடி தெற்கு காவல் நிலையத்திற்கு கூட்டி சென்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
48 கிலோ புகையிலை மற்றும் மசாலா போதைப் பொருள்கள் வைத்திருந்த நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!