Tamilnadu
பொது சிவில் சட்டம்.. சட்ட ஆணையத்துக்கு கடிதம் எழுதிய முதல் மாநிலம்: வழிகாட்டும் தமிழ்நாடு முதலமைச்சர்!
இந்திய சட்ட ஆணையத்தின் 21 வது நீதிபதி பி.எஸ் சௌகான் இருந்தபோது, "தற்போதைய சூழ்நிலையில் பொது சிவில் சட்டம் தேவையற்றது" என்று சட்ட ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
பின்னர் அவர் ஓய்வு பெற்றதை அடுத்து நவம்பர் மாதம் சட்ட ஆணையத்தின் 22வது தலைவராக நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் பதவியேற்ற உடனே மீண்டும் பொது சிவில் சட்டம் குறித்து ஆய்வு நடத்த இந்திய சட்ட ஆணையம் தொடங்கியுள்ளது.
மேலும் முந்தைய சட்ட ஆணையத்தின் அறிக்கை காலாவதியாகிவிட்டதாகவும் கூறியுள்ளது. அதோடு பொதுமக்களும், மத அமைப்புக்களும் 30 நாட்களில் தங்களுடைய கருத்தை தெரிவிக்கலாம் என்று கடந்த மாதம் 14 ஆம் தேதி சட்ட ஆணையம் பொது அறிவிப்பை வெளியிட்டது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் பொது சிவில் சட்ட கருத்து கேட்பு தேவையற்றது, கருத்துக் கேட்பை கைவிட வேண்டும் என்று சட்ட ஆணையத்துக்கு தி.மு.க, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன. ஆனால், ஒன்றிய அரசு பொது சிவில் சட்டத்தை அடுத்த வாரம் தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய தீவிரம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுவரை மாநில அரசுகள் சார்பாக எந்த மாநிலமும் கடிதம் எழுதாத நிலையில் முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும் என கடிதம் எழுதியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்கும் ஊறுவிளைவிக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும்" என இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ரிதுராஜ் அவஸ்தி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் பொது சிவில் சட்டத்தை எதிர்பதிலும் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடுதான் வழிகாட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?