Tamilnadu
”ஆளுநர் ஆர்.என்.ரவியால் தி.மு.க அரசை அசைத்துக் கூட பார்க்க முடியாது”.. வைகோ பேட்டி!
ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியில் ஒரு வாரமல்ல ஒரு மாதம் கூட இருந்து ஆலோசனை நடத்தினாலும் தமிழ்நாட்டு அரசை அசைத்துப் பார்க்க முடியாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, " தமிழ்நாட்டு ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் ம.தி.மு.க சார்பில் நடைபெற்று வருகிறது. மாவட்டம் வாரியாக மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமாக கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று வருகிறார்கள்.
பெங்களூருவில் வரும் 17, 18 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கூடத்திற்கு மதிமுகவுக்கும் அழைப்பு வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தொலைபேசி மூலம் பேசினார். நான் வருகிறேன் என்று சொல்லியுள்ளேன். பா.ஜ.கவை எதிர்க்க குறைந்தப்பட்ச செயல் திட்டத்தை உருவாக்க தான் எதிர்க்கட்சிகள் ஓரணியில் செயல்பட தொடங்கி இருக்கிறார்கள்.
பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ஒன்றிய அரசு நினைக்கிறது. இந்த பொது சிவில் சட்டத்தை கொண்டு வரக்கூடாது. அது நமது நாட்டின் பன்முக தன்மைக்கு எதிரானது. மணிப்பூர் மாநிலம் கலவரத்தால் ரத்தக்களரி ஆகி இருக்கிறது. இத்தனை உயிர் சேதம் ஏற்பட்டும் பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார். அது கண்டடிக்கத்தக்கது.
இந்தியா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார். ஆங்கிலேயர் காலத்தில் இருந்த ஆளுநர்கள் போல அவர் செயல்படுகிறார். அவர் ஒரு வாரமல்ல, ஒரு மாதம் கூட டெல்லியில் இருந்து ஆலோசனை நடத்தினாலும், தமிழ்நாட்டு அரசை அசைத்துப் பார்க்க முடியாது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!