Tamilnadu

மதபோதகர் குறித்து அவதூறு வீடியோ.. இந்து முன்னணி நிர்வாகி கனல் கண்ணனை அதிரடியாக கைது செய்த காவல்துறை !

சினிமாவில் ஸ்ட்ண்ட் மாஸ்டராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் சண்டை காட்சிகளை இயக்கியுள்ளார். மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.கவில் இணைந்த இவருக்கு, இந்து முன்னணி அமைப்பின் மாநில கலை மற்றும் பண்பாட்டு பிரிவு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இவர் கனல் கண்ணன் கடந்த மாதம் 18-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர், கிறிஸ்தவ மத போதகர் உடை அணிந்துகொண்டு பெண் ஒருவருடன் நடமாடுவது போன்று உள்ளது. இந்த வீடியோவுக்கு தமிழ் பாடல் ஒன்றை வைத்து எடிட் செய்யப்பட்டு பதிவிட்டுள்ள கனல் கண்ணனுக்கு கண்டனங்கள் குவிந்தது.

மேலும் அவர் மதத்தை வைத்து அவமரியாதையாக பதிவிட்டதாக குற்றசாட்டுகள் எழுந்தது. இது பெரும் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மதத்தை இழிவு படுத்திய கனல் கண்ணன் மீது கன்னியாகுமரி மாவட்டம் திட்டு விளையை சேர்ந்த திமுக நிர்வாகி ஆஸ்டின் பெனட் என்பவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்பு கூட மதுரவாயல் பகுதியில் நடைபெற்ற இந்து முன்னணி அமைப்பு கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய கனல் கண்ணன், ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலை குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்தார். இதையடுத்து தந்தை பெரியார் திராவிடக் கழகம் சார்பில் அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து.. தலைமறைவாக இருந்த கனல் கண்ணன் கைது - போலிஸில் சிக்கியது எப்படி !