Tamilnadu
”தமிழ்நாட்டில் பா.ஜ.கவால் ஒரு MP சீட்கூட ஜெயிக்க முடியாது”.. தயாநிதி மாறன் MP உறுதி!
சென்னை செளகார்பேட்டை மின்ட் சாலை முதல் என்.எஸ்.சி.போஸ் சாலை வரையிலும் பிரகாசம் சாலை,டேவிட்சன் தெரு,உம்பர்சன் தெரு ஆகிய சாலைகளில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் 12.52 கோடி மதிப்பீட்டில் 2459 மீ நீளத்திற்குத் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மழை நீர் வடிகால் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில் அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி சென்னையில் மழை பெய்தால் எந்த சாலையிலும் தண்ணீர் தேங்கக் கூடாது என்ற அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சென்னையில் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகச் சென்னையில் எங்குமே மழை நீர் தேங்காமல் இருக்கும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மட்டும் மழை நீர் கால்வாய் பணிகள் இன்னும் முடியாமல் உள்ளது. இந்த பணிகள் விரைந்து முடிவடையும்.
தற்போது மின்ட் தெரு, பிரகாசம் சாலை ஆகிய இடங்களில் மழை நீரை வெளியேற்றக் கால்வாய்கள் அமைக்கும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த பணி செப்டம்பர் 15க்குள் முடியும் என்று எதிர்பார்க்கிறோம்.இந்த பணி முடிந்தால் துறைமுகம் பகுதி மக்கள் முழுமையாகப் பயனடைவார்கள்.
இந்தியா முழுவதும் பா.ஜ.க எதிர்ப்பு அலைதான் இருக்கிறது. விலை உயர்வால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.2024 தேர்தலில் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது. அதேபோல் தமிழ்நாட்டில் பா.ஜ.கவால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட வெற்றி பெற முடியாது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?