Tamilnadu
“கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்” : ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பிப்பது எப்படி ? முழு விவரம் !
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக சார்பில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத் தொகைக்கான பட்ஜெட் அறிவிக்கப்பட்டது.
மேலும் இந்த திட்டமானது அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' பயன்பெறும் வகையில் நேற்று வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. தொடர்ந்து தற்போது இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி ?
* குடும்பத் தலைவிகள் தங்கள் பகுதியில் அமைந்திருக்கும் ரேஷன் கடைகளில் சென்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
* அதனை பெறும்போது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புக் உள்ளிட்டவற்றின் நகலை (Xerox) கொண்டு செல்ல வேண்டும்
* பின்னர் அந்த விண்ணப்ப படிவத்தை அதில் இருப்பது போல், பெயர், ஆதார் எண், பெயர், குடும்ப அட்டை எண், திருமண நிலை, மொபைல் எண், சொந்த வீடு உள்ளதா இல்லையா உள்ளிட்டவற்றை நிரப்ப வேண்டும்.
* மேலும் ஆண்டு வருமானம் ரூ..2.5 லட்சத்திற்கும் கீழ் உள்ளவர்களாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் யாரும் வருமான வரி செலுத்துபவர்களாக இருக்க கூடாது.
* 5 ஏக்கர் நன்செய், அல்லது 10 ஏக்கர் புன்செய் நிலங்கள் மட்டுமே வைத்திருக்க வேண்டும்.
>> படிவத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் முழுமையாக நிரப்பி முடித்துவிட்டு, பின் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள உறுதி மொழியை நன்கு படிக்க வேண்டும். அரசு குறிப்பிட்டுள்ளவற்றிற்கு மாறாக போலியாக ஏமாற்றி விண்ணப்பித்தது அறியப்பட்டால், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!