Tamilnadu
வேகமாக ஓட்டி வந்த கார்.. பைக் மீது இடித்து விபத்து.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் TTF வாசன் !
கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள முத்துக்கல்லூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் TTF வாசன். இவர் இருசக்கர வாகனத்தில் ஊர் ஊராகப் பணம் செய்து தனது அனுபவங்களை யூடியூபில் பதிவேற்றி வெளியிட்டு வருகிறார். இவரின் Twin Throttlers என்ற யூடியூப் பக்கத்திற்கு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். மேலும் இவருக்கு இந்த வீடியோக்கள் மூலம் ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.
பைக்கிலே ஊர் ஊராக சுற்றி அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டு வருவார். மேலும் இவர் பைக் ரேசர் என்பதால் தனது பைக்கில் அதிவேகமாக செல்லுவது போன்ற வீடியோக்களையும் பதிவிட்டு வருவார். பப்ளிசிட்டிக்காக இவர் செய்யும் அட்ராசிட்டிகளால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிவேகமாக வாகனம் ஓட்டி பெரும் சர்ச்சையில் சிக்கிய நிலையில், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக இரு சக்கர வாகனத்தை இயக்கியதாக TTF வாசன் மீது கோவை போத்தனூர் போலிஸார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இப்படியே இவர் பல தொந்தரவுகளை ஏற்படுத்தி வந்தார்.
இப்படி அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதாகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியதாகவும், நம்பர் பிளேட் இல்லாமல் காரை இயக்கியதாகவும் என பல்வேறு சாலை விதிகளை மீறியதாக அவர் மீது ஏகப்பட்ட வழக்குகளில் இருக்கும் நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் போலீசுக்கு சவால் விட்டும் பிரபல பத்திரிகையாளர் ஐயப்பன் ராமசாமிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டதற்கு அவர் மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இப்படியே தினமும் சர்ச்சைகளையும், பிரச்னைகளையும் தனது பையில் போட்டு சுற்றும் இவர் தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் போஸ்டர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 29-ம் தேதி வெளியானது. இந்த படத்தின் பணிகளுக்காக தற்போது இவர் சென்னையில் முகாமிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!