Tamilnadu
விபத்தில் குடும்பத்தையே இழந்தும் +2-வில் முதலிடம்.. மாணவி அமுதாவுக்கு உதவிகரம் நீட்டிய தமிழ்நாடு அரசு !
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கல்பாரப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களது மகள்கள் பூங்கொடி, அமுதா. இந்த சூழலில் கடந்த 6-ம் தேதி நடந்த சாலை விபத்தில் வெங்கடாசலம், மாரியம்மாள், பூங்கொடி ஆகியோர் உயிரிழந்தனர். இதனால் அமுதா அவரது பாட்டி பராமரிப்பில் உள்ளார்.
இவர் இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்வில் 600-க்கு 574 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். ஆனால் பெற்றோரை இழந்ததால் உயர் கல்வியை தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் பல்வேறு தரப்பினரும் மாணவிக்கு உதவிகளை செய்ய தொடங்கினார். மேலும் தனக்கு உதவி வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தார்.
இதனிடையே முதலமைச்ச மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் அமுதாவின் உயர்கல்வி செலவு, மருத்துவம், இருப்பிட வசதி உள்ளிட்டவற்றை தமிழ்நாடு அரசு சார்பில் சேலம் மாவட்ட நிர்வாகம் முழுமையாக ஏற்றுக் கொள்ளும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் பசுமை வீடு திட்டத்தின் கீழ் ரூ.2.48 லட்சத்தில் வீடு கட்டுவதற்கான ஆணையை மாணவி அமுதாவிடம் ஆட்சியர் கார்மேகம் வழங்கினார்.
விபத்தில் பெற்றோரை இழந்த தனக்கு மேற்படிப்பு மற்றும் வீடு கட்ட உதவி செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் மாணவி அமுதா நன்றி தெரிவித்தார். ஏற்கனவே திமுகவை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் அமுதாவுக்கு உதவி கரம் நீட்டியுள்ளனர் என்பது கூடுதல் தகவல் .
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!