Tamilnadu
”அமைச்சரை நீக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை”: ஆளுநருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தின் 10 முக்கிய சாராம்சம்
தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்யப்படுவதாக நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்குக் கிடையாது. சட்ட ரீதியாக இதனை நாங்கள் சந்திப்போம்" என தெரிவித்திருந்தார். இப்படி ஆளுநரின் நடவடிக்கைக்கு அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தன.
இதையடுத்து அடுத்த 5 மணி நேரத்திலேயே, அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்குவதற்கான அறிவிப்பை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் தரப்பிலிருந்து மற்றொரு அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் எனது அமைச்சரவையில் இருந்து யாரையும் நீக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தின் முக்கிய சாராம்சம் இதோ:-
1.எனது அமைச்சரவையில் இருந்து யாரையும் நீக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை.
2. அமைச்சரை நேரடியாக நியமிப்பதற்கோ, நீக்குவதற்கோ ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை.
3. சட்ட ஆலோசனை பெறாமல் ஆளுநர் முக்கிய முடிவை எடுத்துள்ளது தெரிகிறது.
4.இந்த விவகாரத்தில் ஆளுநர் அவசரம் காட்டி இருப்பது வெளிப்படையாக தெரிகிறது.
5.எனது பரிந்துரை இல்லாமல் அமைச்சரை நீக்கி தாங்கள் தெரிவித்த சட்ட விரோத தகவல் செல்லுபடியாகது.
6.அமைச்சரை நீக்கும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு மட்டுமே உண்டு.
7.ஆளுநர் வழங்கும் அரசியல் சாசனுத்துக்கு விரோதமான உத்தரவுகளை நாங்கள் பின்பற்ற மாட்டோம்.
8. வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய பிறகு தான் அமைச்சர் பதவியில் தொடரும் தகுதியை இழப்பார்.
9.விசாரனை தொடங்கி விட்டாலே ஒருவர் சட்டப்படி அமைச்சராக தொடரக்கூடாது என்று கூற முடியாது.
10. அமைச்சரை நீக்குவது குறத்து அட்டார்னி ஜெனரலிடம் ஆலோசிக்கப் போவதாக ஆளுநர் கூறியுள்ளார்.
11. ஊழலுக்கு எதிரானவராக ஆளுநர் இருக்கிறார் என்றால் ஏன் அதிமுக முன்னால் அமைச்சர்கள் மீதான கோப்புகளுக்கு நீங்கள் அனுமதி அளிக்காமல் இருப்பது ஏன்..?
12.ஆளுநரின் இத்தகைய இரட்டை நிலையான நடவடிக்கை உள் நோக்கத்துடன் செயல்படும் பாரபட்சமான நடவடிக்கை
13. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கையாளும் போது ஆளுநர் போன்ற அரசியலமைப்பு அதிகாரிகள் கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்.
14. ஆதாரமற்ற அச்சுறுத்தல்களை கொடுத்து அரசமைப்பு சட்டத்தை மீற வேண்டாம்.
15. தமிழர் நாகரீகத்தோடு உங்களிடம் மிகுந்த மரியாதையோடு நடந்துக்கொண்டோம். ஆனால் அதற்காகவே நாங்கள் எல்லாவற்றிற்கும் பணிந்துப்போவம் என்று எதிர்ப்பார்க்காதிர்கள்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!