Tamilnadu
“மதரீதியாக மக்களை பிரித்தாளுவது தான் தேர்தல் வெற்றி என நினைக்கிறார்கள்..” - பாஜகவை விமர்சித்த KS அழகிரி !
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கும்பகோணத்தில் உள்ள குடவாசலில் கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தார். அப்போது கும்பகோணம் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களுக்கு சந்தித்து அவர் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "ஆர்எஸ்எஸ், பாஜக மறைமுகமாக பேசிக்கொண்டிருந்த பொது சிவில் சட்டத்தை மோடி வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். இந்தியாவை போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டிற்கு பொது சிவில் சட்டம் சரியாக வராது. பிரச்னைகளை தான் உருவாக்கும். பொது சிவில் சட்டம் என்பது ஒரே மதம், ஒரே மொழி இருக்கும் தேசத்திற்கு மட்டுமே பொருந்தும். ஒரு மதம் மட்டும் இந்த நாட்டில் இருக்கவில்லை.
இங்கு மாறுபட்ட மனிதர்கள் ஒரே நாடாக வாழ்கிறார்கள் என்பதை தான் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்று மகாத்மா காந்தி சொல்லி இருக்கிறார். இந்த தேசத்தில் ஒரே சிவில் சட்டம் கொண்டு வரப் போகிறேன் என்று மோடி சொல்கிறார். அவருடைய தேர்தல் பிரச்சாரம் அது தான். இதை சொன்னால் நாட்டில் மக்கள் பல்வேறு விதமாக பிரிந்து செல்வார்கள், சண்டையிட்டுக் கொள்வார்கள். அதுதான் அவர்களுக்கு தேவை. அது இருந்தால் அவர்கள் ஜெயிக்கலாம்.
மணிப்பூரில் இன்று அவர்கள் அதை தான் செய்துள்ளனர். மலைவாழ் மக்களுக்கும், நகரத்தில் வாழும் மக்களுக்கும் பிரச்னையை தோற்றுவித்து, கடந்த ஆறு மாத காலமாக அந்த மாநிலம் தீப்பற்றி எரிகிறது. தற்போது வலிமையான ராணுவம் உள்ள நிலையில் மோடி நினைத்திருந்தால் 24 மணி நேரத்தில் கலவரத்தை அடக்கி இருக்க முடியும். ஆனால் அந்த கலவரத்தை உருவாக்கியவர்களே அவர்கள் தான்.
எனவே அதைப் பற்றி கொஞ்சமும் சிரமப்படாமல் இந்த வேற்றுமையை உருவாக்குகிறார்கள். இது நாட்டிற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று சொல்லும் மோடி, ஒரே ஜாதி இந்தியாவில் இருக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா. மதரீதியாக மக்களை பிரித்தாளுவது தான் தேர்தல் வெற்றிக்கு பயன்படும் என்று அவர்கள் கருதுகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது.
குஜராத்தில் மூன்று தினங்கள் இஸ்லாமியர்களை கொன்று குவிப்பதற்காகவே மோடி முதலமைச்சராக இருக்கும்போது எடுத்துக்கொண்டார். அதன் மூலம் அங்கே பிரிவினையை உருவாக்கினார்கள். எனவே இந்த சூழல் நல்லதல்ல. இந்தியாவில் இருக்கும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அத்தனை பேரும் இதனை எதிர்க்கிறார்கள்.
இதன் மீது தமிழ்நாடு காங்கிரஸும் அழுத்தமான பதிவை வைக்கிறது. ஆம் ஆத்மி மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் தற்போது நடைபெற்று முடிந்த கூட்டத்தில் பங்கேற்றனர் அவ்வளவுதான். கூட்டணி என்பது பல்வேறு கருத்துகளை உடையவர்கள் சேர்வது தான். அவர்கள் இன்னும் கூட்டணியில் உறுதியாக வரவில்லை" என்றார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !