Tamilnadu
கடிதத்தில் கோரிக்கை வைத்த இறையன்பு.. நேரில் அழைத்து நிறைவேற்றிக் கொடுத்த தலைமை செயலாளர் இறையன்பு !
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த ஆதனூர் நாஞ்சில் நகரை சேர்ந்தவர் அனந்தராமன். இவருடைய மகன் பெயர் இறையன்பு. 12 வயதுடைய இந்த சிறுவன் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சூழலில் இந்த சிறுவன் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்-க்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், " என் பெயர் இறையன்பு. நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன். என் அண்ணன் பெயர் ஆதித்யா கல்லூரியில் படித்து வருகிறார். தாங்கள் பணியில் இருந்து ஓய்வு பெற போவதாக என் பெற்றோர்கள் மூலம் நான் அறிந்து கொண்டேன். என் அம்மாவும், அப்பாவும் தங்கள் பெயரையே எனக்கு வைத்துள்ளனர். உங்களைப் போலவே நான் பிறரிடம் அன்பாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லுவார்கள். நானும் அப்படி இருக்க முயற்சி செய்வேன்.
நான் வகுப்பில் நன்றாக படிப்பேன். என் அம்மாவின் மூலம் தங்களின் சில நகைச்சுவை கதைகளை கேட்டுள்ளேன். ஐயா நானும் என் நண்பர்களும் மாலை நேரங்களில் விளையாடுவோம். எங்கள் தெரு மழைக்காலங்களில் மிகவும் குண்டும் குழியாகவும் மாறி விடுகிறது. நடப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. பலர் வழுக்கி விழவும் நேரிடுகிறது. தயவுகூர்ந்து எங்கள் தெருவிற்கு சாலை வசதி செய்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதம் கிடைக்கப்பெற்றதையடுத்து தலைமைச் செயலாளர் இறையன்பு, சிறுவனின் குடும்பத்தினை நேரில் அழைத்து பேசினார். மேலும் மாணவனின் கோரிக்கையை அடுத்து சாலையை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதோடு மாணவன் இறையன்புவுக்கு பரிசாக ஒரு பேனாவையும் வழங்கினார். இது தொடர்பான கடிதமும், புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!