Tamilnadu
ஆம்பூர் அருகே ரயில் தண்டவாளத்தில் பெரிய கற்களை வைத்த சம்பவம் : ஒருவர் கைது.. விசாரணையில் அதிர்ச்சி !
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வீரக்கோவில் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று காலை மர்ம நபர் ஒருவர் பெரிய அளவிலான கான்கிரீட் கலவையிலான கல்லை வைத்துள்ளார். இந்த சூழலில் அந்த ரயில்வே மார்க்கத்தில் மைசூரில் இருந்து ஆம்பூர் வழியாக சென்னைக்கு செல்லக்கூடிய காவிரி எக்ஸ்பிரஸ் ஆம்பூரை கடந்து அந்த பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த ரயில், தண்டவாளத்தில் இருந்த அந்த கல்லின் மீது மோதியுள்ளது. இதனால் ரயில் என்ஜீனில் இருந்து பயங்கர சத்தம் கேட்டவுடன் ரயிலை இயக்கக்கூடிய லோகோ பைலட் விரைவு ரயிலை அருகில் இருந்த பச்சகுப்பம் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி சோதனை செய்துள்ளார். அப்போது ரயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கற்கள் மீது ரயில் மோதியது தெரியவந்தது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து உடனடியாக லோகோ பைலட், ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்தில் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் இளவரசி தலைமையில் காவல்துறையினர் தண்டவாளத்தில் கற்களை வைத்த மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் ரயிலை கவிழ்க்க யாரோ சதித்திட்டம் தீட்டியதாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இதற்காக சென்னையிலிருந்து மோப்பநாய் உடன் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ராபீன் பயிற்சியில் இருந்த மோப்பநாய் ஜான்சியின் சென்னையிலிருந்து மோப்பநாய் உடன் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ராபீன் பயிற்சியில் இருந்த மோப்பநாய் ஜான்சியின் உதவியுடன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அந்த மோப்பநாய் ஜான்சி ரயில்வே தண்டவாளத்தில் கற்கள் வைத்த இடத்திலிருந்து சற்று தூரம் ஓடி அருகில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் நின்றது. இதனை தொடர்ந்து சம்பவம் நடைப்பெற்ற இடத்தை சுற்றியுள்ள கடைகள் மற்றும் கோவில்கள் மற்றும் பெரியகொம்பேஸ்வரம், சின்னகொம்பேஸ்வரம், கன்னிகாபுரம், சோமலாபுரம், புதுகோவிந்தாபுரம் ஆகிய பல கிராம பகுதிகளில் சென்னை ரயில்வே பாதுகாப்பு படை துணை காவல் கண்காணிப்பாளர் பெரியசாமி தலைமையிலான 12 பேர் கொண்ட ரயில்வே குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த சமயத்தில் ஆம்பூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த நபரை பிடித்து ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரின் தோள் பட்டையில் இருந்து துணிகளை மோப்பநாய் உதவியுடன் ஆய்வு செய்த போது அவர் தான் வீரக்கோவில் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னர் அவரிடம் ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்ட போது அவர் மேற்கு வங்கமாநிலத்தை சேர்ந்த மங்கள் பிரசாத் என்பதும் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து மங்கள் பிரசாத்தை தமிழ்நாடு அரசின் இலவச தாய் சேய் ஊர்தி மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ரயில்வே காவல்துறையினர் அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!