Tamilnadu
கலாஷேத்ரா, மல்யுத்த வீராங்கனைகளுக்கு குரல் கொடுத்தீர்களா? - குஷ்பூவிடம் கேள்வியெழுப்பிய மாதர் சங்கம் !
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் உள்ள நடிகை குஷ்பூ குறித்து, திமுக முன்னாள் உறுப்பினர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து திமுக தலைமைக்கழகம் அவர் மீது நடவடிக்கை எடுத்து, அவரது அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கம் செய்தது.
இதைத்தொடர்ந்து பொதுமேடையில் அவதூறாக பேசியதாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போலீசார் கைது செய்யப்பட்டார். இந்த சூழலில் தன்னை குறித்து அவதூறாக பேசியதாக குஷ்பூ கண்ணீர் மல்க பேட்டி அளித்திருந்தார். மேலும் குஷ்பூ பாஜகவில் சேர்ந்த பின், பெண்களுக்கு எதிராக பாஜகவினர் நடத்தும் வன்முறைகள், அநீதிகள் உள்ளிட்டவற்றிற்கு எதிராக குரல் எழுப்பாமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் குஷ்பூவுக்கு இதுகுறித்து அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) மாநில செயலாளர் ராதிகா அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் குஷ்பூவுக்கு எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு : -
"கற்பு குறித்து நீங்கள் தெரிவித்த ஒரு கருத்திற்காக தமிழகம் முழுவதும் சங்கிகள் குறிப்பாக பாஜக தலைவர் எச்.ராஜா உங்கள் மீது சேற்றை வாரி இறைத்தது போல விஷமத்தை கக்கியபோது அதற்கு எதிராக முதல் எதிர்ப்புக்குரல் கொடுத்ததும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம். துரதிஷ்டம் பாருங்கள் இப்போது அக்கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கிறீர்கள்.
ஆனால் அன்றும் இன்றும் என்றும் பெண்களை இழிவுபடுத்த ஆபாசமாக பேசும் எந்த ஒரு செயலையும் யார் செய்தாலும் எந்த சமரமும் இன்றி முதல் எதிர்ப்புக் குரலை கொடுப்பது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் என்பதை நாடறியும். ஆனால் உங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு உடனடியாக எதிர்வினையாற்றிய அதேவேகத்தில் உங்களிடம் சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறேன்.
சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் பயிலும் மாணவிகள் பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்ட செய்தி தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய போது அமைதியாகவே கடந்து போனீர்கள். டெல்லியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் நீங்கள் பொறுப்பு வகிக்கும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூசன் சரண் சிங் என்ற கயவனால் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் பெண்கள் அமைப்புகள் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்து இருந்தபோதும் நீங்கள் இது குறித்து பேச மறுத்துவிட்டீர்கள்.
தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினர் என்ற முறையில் தமிழகத்தில் முன்னெடுத்த பெண்கள் நலன் காக்கும் நடவடிக்கைகள் என்ன? மேற்கண்ட கேள்விகளுக்கு எல்லாம் உங்களிடம் பதில் இருக்காது என்பது நன்கு தெரியும். ஏனென்றால் நீங்கள் சாந்திருக்கும் பாஜக எந்தக் காலத்திலும் நியாயத்தின் பக்கம் நிற்கும் கட்சி அல்ல. எல்லாவற்றிலும் சுய லாபம் தேடும் பாஜகவில் அங்கம் வகிக்கும் உங்களைப் போன்றோரின் நாடக அரசியலை மக்கள் நன்கு அடையாளம் கண்டு வைத்துள்ளனர்." என்றுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!