Tamilnadu

"தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது" -விழிப்புணர்வை ஏற்படுத்திய ஹூண்டாய் நிறுவனம் !

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனந்தமாக உள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் அதிக கார்களை விற்பனை செய்து ஒவ்வொரு ஆண்டும் சாதனை படைத்தது வருகிறது. மேலும், உலகளவிலும் தங்கள் கார்களை ஏற்றுமதி செய்தும் வருகிறது.

இப்படி மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஹூண்டாய் நிறுவனம் சாலை விதிமுறைகளை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கடந்த 5 ஆண்டுகளாக #BeTheBetterGuy ( Buckle up, Young India ) எனும் விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்தி வருகிறது.

அந்த வகையில் தற்போது கலைஞர் செய்திகள் நிறுவனத்தோடு இணைந்து இந்தாண்டுக்கான #BeTheBetterGuy விழிப்புணர்வு பிரசாரத்தை ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் மேற்கொண்டுள்ளது. அதன்படி, சாலைகளில் நடந்து செல்லும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும், வாகனங்களில் செல்வோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்தும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் வலியுறுத்தப்படுகிறது.

அதில் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் சாலை விதிகளை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்தும், அப்படி சாலை விதிகளை முறையாக பின்பற்றாத பொதுமக்களுக்கு அது குறித்த விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.

இதற்காக திருச்சி,திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை போன்ற பகுதிகளில் இந்த விழிப்புணர்வு பிரச்சரம் நடைபெற்றது. அதில் சாலையில் தலைக்கவசம் அணியாக பயணிகளிடம் அதற்கான காரணங்கள் கேட்கப்பட்டு, தலைக்கவசத்தை முக்கியத்துவம் பற்றி விவரிக்கப்பட்டது.

போக்குவரத்துக்கு காவலர்களுடன் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இது தவிர பயணிகளுக்கு சாலை விதிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், செல்போன் பயன்படுத்தி வாகனம் ஓட்டக்கூடாது, முறையான லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்கக்கூடாது போன்ற அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

அதோடு, அப்படி தலைக்கவசம் அணியாமல் வந்த பயணிகளை வைத்து "தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது" என கூறவைத்து அதன்மூலமும் விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு மூலம் ஏராளமானோர் தாங்கள் சாலை விதிகளை முறையாக பயன்படுத்துவோம் என உறுதிமொழி அளித்தனர்.

Also Read: சென்னையில் தண்ணீர் தேக்கம் இல்லை.. சீர் செய்யப்பட்ட போக்குவரத்து : துரித நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி!