Tamilnadu
பாஜகவை விமர்சித்ததால் ஆத்திரம்.. காமெடி நடிகரை தாக்கி காலை உடைந்த பாஜக நிர்வாகிகள் 3 பேர் கைது !
சன்டிவி, விஜய்டிவி போன்ற தனியார் தொலைக்காட்சிகளில் நடைபெற்ற காமெடி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளை செய்துகாட்டி பிரபலமானவர் காமெடி நடிகர் வெங்கடேசன். இவர் கருப்பசாமி குத்தகைதாரர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் சமூகவலைத்தளத்தில் பாஜக குறித்தும், பிரதமர், அமித்ஷா, அண்ணாமலை குறித்தும் அவர்களுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை பதிவிட்டுவருகிறார். இவர் மதுரை தபால்தந்திநகர் 3ஆவது தெரு பகுதியில் சொந்த வீட்டில் மனைவியுடன் வசித்துவரும் நிலையில், இவருக்கும் இவரின் மனைவிக்கும் சமீப காலமாக தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் இருவருக்கும் நீதிமன்றத்தில் விவகாரத்து வழக்கு நடைபெற்று வந்துள்ளது. இதனிடையே இருவருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த மனைவி பானுமதி கணவரை தாக்கி அவரது கால்களை உடைத்து வீட்டிற்குள்ளயே இருக்குமாறு முடக்க வேண்டும் என வெங்கடேசனின் ஓட்டுனரிடம் கூறியுள்ளார்,
மேலும், பானுமதி தனது உறவினரான பாஜக நிர்வாகியான கோசாகுளம் பகுதியை சேர்ந்த BJP பட்டியலணி மாநில செயற்குழு உறுப்பினர் வைரமுத்துவிடம் பிரச்சனையை கூறியுள்ளார். இதனையடுத்து பானுமதிக்கு உதவுவதாக கூறிய பாஜக நிர்வாகியான வைரமுத்து, பாஜக நிர்வாகிகள் இருவரை சந்தித்து காமெடி நடிகர் வெங்கடேசன் பாஜக குறித்து விமர்சிப்பதால் அவரை அடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு காமெடி நடிகர் வெங்கடேசன் தபால்தந்திநகர் காரில் வந்தபோது காரை வழிமறுத்து ஓட்டுனரிடம் கத்தியை காட்டி மிரட்டிய பாஜக கும்பல், அவரை கடத்திசென்று பாஜக குறித்து கருத்துக்களை பதிவிடுவயா என கூறியபடி கடுமையாக தாக்கி அவரின் கால்கள் இரண்டையும் உடைத்துள்ளனர்.
இதில் காயமடைந்த வெங்கடேசன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி போலிஸார் நடத்திய விசாரணையில் வெங்கிடேசனின் மனைவி, அவரின் கார் ஓட்டுநர் மோகன், ராஜ்குமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அந்த 6 பேரை கைது செய்த போலிஸார் அவர்களை சிறையில் அடைந்தனர்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!