Tamilnadu
விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை.. மருத்துவமனையில் எப்படி இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி!
தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் வீட்டில் நேற்று தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாகச் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடந்தது. தொடர்ந்து தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் அமைச்சரின் அறையில் சோதனை நடத்தினர் .
சுமார் 17 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்ற நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை உறவினர், குடும்பத்தினரைக் கூட சந்திக்க விடவில்லை. தொடர்ந்து அவருக்கு மன அழுத்தத்தை அதிகாரிகள் கொடுத்து வந்தனர். இந்த சூழலில் சோதனை நிறைவடைந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யப்போவதாகவும், தங்களுடன் நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு வருமாறும் அதிகாரிகள் அழைத்தனர்.
பின்னர் முறையான அனுமதி, நோட்டீஸ் எதுவும் இல்லாமல் அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்துச் சென்றபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
இதுபற்றி அறிந்த உடனே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பேசமுடியாத நிலையிலிருந்துள்ளார்.
இதையடுத்து அவருக்குத் தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். பின்னர் அவருக்கு இருதய இரத்த நாள பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மூன்று முக்கியமான இரத்த குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது.
பிறகு உடனே அவருக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரார் மருத்துவமனை இயக்குநர் பரிந்துரை செய்துள்ளார். மேலும் ஒன்றிய அரசின் ESI மருத்துவர்களும் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வருகை தந்து மருத்துவர்களின் அறிக்கைகளை ஆய்வு செய்துள்ளனர்.
இவர்களும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விரைவில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விரைவில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய உள்ளது உறுதியாகியுள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே செல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!