Tamilnadu
வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்.. வெளியேற்றப்பட்ட சில மணி நேரத்தில் மர்ம மரணம்!
பா.ஜ.க கட்சியின் தேசிய மகளிரணி தலைவராக இருப்பவர் வானதி சீனிவாசன். இவர் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். கோவை பந்தயச் சாலை காவல் நிலையம் அருகே வானதி சீனிவாசன் சட்டமன்ற அலுவலகம் உள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை சட்டமன்ற அலுவலகத்திற்குள் மர்ம நபர் ஒருவர் திடீரென நுழைந்துள்ளார். மேலும் அங்கிருந்த அறையின் கதவைச் சாத்த முயன்றுள்ளார். அப்போது அலுவலகத்திலிருந்த விஜயன் என்பவர் அவரை பிடித்து வெளியே தள்ளியுள்ளார்.
பின்னர் அந்த நபர் அங்கிருந்து சென்றுள்ளார். இது குறித்து பந்தயச் சாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து போலிஸார் விசாரணை நடத்தினர். சட்டமன்ற அலுவலகத்திலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி அந்த மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனிடையே கோவை அண்ணா சிலை சிக்னல் அருகே வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ அலுவலகத்திற்குள் புகுந்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலிஸார் அவரை உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த மர்ம நபர் யார்? ஏன் வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் நுழைந்தார்?, எப்படி அவர் உயிரிழந்தார் என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சில மணி நேரத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!