Tamilnadu

போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.18 கோடி மோசடி.. துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல்: பா.ஜ.க நிர்வாகி கைது!

சென்னை அடுத்த ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் செங்கல், மணல், ஜல்லிகற்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரை 2009ம் ஆண்டு ஸ்ரீனிவாசன், அவரது மனைவி பவானி ஆகியோர் சந்தித்துள்ளனர்.

அப்போது அவர்கள், "நாங்கள் நடத்தி வரும் SMG என்டர்பிரைசஸ் & பொறியியல் மூலம் கான்ட்ராக்ட் தொழிலிலும், ரியல் எஸ்டேட் தொழிலிலும் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்" என கூறியுள்ளனர்.

இதை நம்பிய கண்ணன் ரூ.30 லட்சம் முதலீடு செய்துள்ளார். இதையடுத்து 2013ம் ஆண்டு ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் (பா.ஜ.க பிரமுகர்) என்பவரைக் கண்ணனுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அப்போது அவர் தனது பெயரில் சொத்து பத்திரங்கள் இருந்தால் வங்கியில் கடன் வாங்க முடியும் என்றும், பிரச்சனைகள் உள்ள இடங்களில் முதலீடு செய்து பின்னர் அதை சரி செய்து அந்த இடத்தை விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

இப்படி கண்ணனை நம்பவைத்து ஸ்ரீனிவாசன் மற்றும் வெங்கடேசன் இருவரும் ரூ.18 கோடி வரை பணம் வாங்கியுள்ளனர். பின்னர் இதற்கான ஆவணங்களைக் கண்ணன் கேட்டபோது அதை ஸ்ரீனிவாசனும், வெங்கடேசனும் தரமருத்துள்ளனர். மேலும் துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டில் விடுத்துள்ளனர். மேலும் இவரது பெயரைப் பயன்படுத்தி வங்கியில் ரூ.3 கோடி வரை கடன் பெற்றுள்ளது.

இந்த மோசடி தெரிந்த கண்ணன் இருவர் மீதும் ஆவடி கால் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலிஸார் ஸ்ரீனிவாசன் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரைக் கைது செய்தனர். மேலும் அதே வழக்கில் திருவள்ளூர் மாவட்ட பா.ஜ.க செயலாளர் நரேஷ் குமார் என்பவரையும் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: ”பா.ஜ.கவின் அச்சுறுத்தும் அரசியல் செல்லுபடியாகாது”.. கொதித்தெழுந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!